சொல்ல விரும்பாதவை - 03-01-2009

யாரோ ஒருவர் செத்துப்போனார்...
ஏதோ ஒரு குடும்பத்தில் இழவு விழுந்திருக்கிறது
இன்னொரு சின்னப்பிள்ளை கைசிதறி விழுந்திருக்கிறது
அதற்கொரு தாய் அழுது கொண்டிருக்கிறாள்
அவள் புருஷனை எப்பொழுதோ புதைத்தாயிற்று
அடையாளம் காணப்பட முடியாத வளவொன்றில்!
திருப்தியான பொருளாதாரம் தேடிப்பார்த்தாலும் தெரியவில்லை...
தேகம் சாதாரணமாய் சந்தைக்கு வருகிறது!
பௌத்தம் காவிக்குள் சுருண்டு கொள்கிறது...
பதவி நினைத்ததை செய்கிறது!
-

இடைக் குறிப்பு:

எதுக்கிந்த யுத்தம் மச்சான்...

நீயும் நானும் சிங்களம்-தமிழ் என்னோட உனக்கு தண்ணி அடிக்க ஏலும்,என்னோட வேலை செய்ய ஏலும்,ஏன் என்ர ஊர் பெட்டையை கலியாணமும் கட்ட ஏலும் ஆனா மச்சான் என்ரை உரிமைல உன்னால கை கைவக்க ஏலாது!

-
புத்தாண்டு பிறந்திருக்கிறது கொண்டாடுகிறேன்
அல்லது கடமைக்கு வாழ்த்து சொல்கிறேன்...
அங்கே ஓரிடம் அகப்பட்டு விட்டது...
இங்கே அதற்கொரு கொண்டாட்டம்!
எனக்கு பசிக்கிறது நான் சாப்பிடுகிறேன்...
எனக்கு வருகிறது நான் போகிறேன்!
என்னிடம் இருக்கிறது நான் செய்கிறேன்..
எனக்கு தோன்றுகிறது நான் எழுதுகிறேன்!
.............எழுதுகிறேன்...
ஈழம்..... சிங்களம்..... அரசியல்
மஹிந்த.....கிளிநொச்சி...

என்ன...?!
மயிரு இழுத்து மூடிட்டு படு...
விடிஞ்சா சோத்துக்கு வழியப்பார்றா பு..பின் குறிப்புகள்:

*
"அபே ரட்ட தெக்கட்ட கடன்ட தென்நா" - எங்கடை நாட்டை இரண்டா பிரிக்க விடமாட்டம்
*
இலங்கை எங்கட நாடு அதில எங்க வேணுமெண்டாலும் யாரும் இருக்கலாம்-
*
"பிரபாகரன் ரஸ்தவாதி" - பிரபாகரன் தீவிரவாதி
*
"தெமிழ கட்டிய மொளே நத்தி கட்டிய"- தமிழ் ஆக்களுக்கு மூளை இல்லை...
*
"மம பஹாட்ட கலிங் யன்டோன எக்கனைக்குட்ட பன்சியாய்"- நான் அஞ்சு மணிக்குள்ள போகவேணும் ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபா!

2 comments:

said...

:( :( :(

Anonymous said...

எனக்கு புரிகிறது உங்கள் ஆதங்கம். இதே ஆதங்கம் எனக்கும் இருக்கேறது.