முடிவுக்கு வாங்கோ…
உவையள் இருக்கிறதென்னவோ இலங்கை எண்டுற அற்புதமான தீவுக்குள்ளதான் ஆனால் அதுக்குள்ளை இருக்கிற பிரச்சனைகள்தான் கொள்ளை பாருங்கோ, எதுக்கிந்த வீண் பிரச்சனைகள் எண்டாலும் கேட்பாரில்லை ம்ம்ம்…பாப்பம் உது எங்கபோய் முடியிதெண்டு ஏற்கனவே இருபத்தைஞ்சு வருசம் பின்னுக்குத்தான் இருக்கிறியள் இல்லாவிட்டால் அந்நியன் படதிதின்ரை கடைசி நேரத்தில விக்கிரம் சிறீலங்காவையும் சொல்லிக்காட்டியிருப்பாரெண்டு எங்கயோ படிச்ச ஞாபகம் அது மட்டுமில்லை இருந்த கல்வித்தரமும் வரவர குறையிறதா ஒரு கதை கவனம் உங்கடை பிரச்சனைகள் முடியிறக்கிடையில நீங்கள் முடிஞ்சுடாட்டால் சரிதான் பாத்து நடவுங்கோ கிட்டடியிலயும் அரசாங்கத்துக்கு இருநூறு கோடி ரூபா நட்டமாம் அதுவும் உங்கட காசுலதான் ஈடுகட்டவேணும் சும்மாவே பொருளாதாரம் கொடிகட்டியிருக்கு என்ன செய்யப்போறியளோ தெரியல்லை ஹ்ஹ்…ம்ம்ம்….

அவையடக்கம்…


வணக்கம்…

நான் தமிழை பேச,எழுத,வாசிக்கத்தெரிந்த ஒருவன் என்கிற ஒரே உரிமையில் பெரும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இந்தச்சிறியவனும் தன் கருத்துக்களையும் சொல்ல முனைந்திருக்கிறேன்…

நான் யார் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறேன் என்பதுதான் இங்கே முக்கியமான விடயம். என்னைப்பொறுத்தவரையில் என் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துபவன் நான் அதற்கான உரிமையும் தைரியமும் என்னிடம் இருக்கிறது அது என் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு…

நன்றி
நல்லதொரு நாளுக்கான வாழ்த்துக்களுடன்
King...