ஒப்பாரி...

புதுப்படம்..
ஷொப்பிங்...
நயன்தாரா...
அரட்டைகள்...
அடுத்த வீடுகள்..
ஏற்பாடுகள்...
சரவணா ஸ்டோர்ஸ்...
chating & dating,
where is the party today?!
whats up?

__________________________

தம்பி என்ன விஷேசம்:)
களநிலவரங்கள் எப்படி,
முல்லைத்தீவை வளைச்சுப்போட்டாங்களாம்
இண்டைக்கு சண்டை நடந்தது எண்டுறாங்கள்?

அண்ணன் என்ன மயிருக்கு நியூஸ் கேக்கிறியள்!
என்ரை வாயைக்கிளறாதையுங்கோ...!!

__________________________________________

நாங்கள் என்ன செய்யுறது மச்சான்
எல்லாம் பொலிடிக்ஸ்
அதே பிழைகள்!
அதே துரோகங்கள்!
இந்தியா ஏதாவது செய்திருக்கலாம்...

________________________________


உடுப்பு தோய்க்க இருக்கு,
காலமை அஞ்சு மணிக்கு எழும்ப வேணும்,
மாத அறிக்கை செய்து முடிக்கவேணும்
மனேஜரோட meeting இருக்கு,
வீட்டுக்கு காசனுப்ப வேணும்...

______________________________

ஒழுங்காக சாப்பிட முடியவில்லை
விரும்பி பார்க்கிற பாடல்களை ரசிக்க முடியவில்லை
எந்த செய்தித்தளங்களையும் வாசிக்க பிடிக்கவில்லை
புத்தகங்கள் வேண்டாம் என்றாகிறது...
அருகே இருக்கிறவளை கவனிக்க முடியவில்லை,
அழைக்கிற மனைவியை அணைக்க முடியவில்லை...

___________________________

காசா(gaza)
ஒபாமா...
சிவசங்கர் மேனன்
திருமாவளவன்...
டாக்டர் முதல்வர் கலைஞர்..
மஹிந்த,ரணில்...
கருணா...

_____________________

எழுதாதவர்கள் எல்லாம் எழுதுகிறார்கள்!
பேசாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்!
அழதவர்கள் எல்லாம் அழுகிறார்கள்!
பயம் இன்னும் கொஞ்சம் கூடியிருக்கிறது!
ஏக்கங்கள் சமநிலைகளை குழப்புகின்றன!
சுதந்திரம் படுக்கையறைகளுக்குள் முடங்கி இருக்கிறது...

___________________________

பொழுது விடிகிறது...
உலகம் வழமைபோல இருக்கிறது
யுத்தங்களும் கொலைகளும்...பின்குறிப்பு:

\\
நானும் அதே ஆதிக்குடிகளில் ஒருவன்!எனக்கான கலாச்சாரம், பண்பாடு, உணர்வு எனக்குள்ளே இருக்கிறது!

\\
கையாலாகாதவர்களுள் நானும் ஒருவன்(என்னால் இன்னொன்று முடியும் இருக்கிற இடத்துக்கு ஏற்றது போல வாழப்பழகிக்கொண்டேன்!)


\\

யுத்தம் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது!

0 comments: