விஜய் கேட்ட வரம்...!!!
ராமன் கிட்ட வில்லு கேட்டன் பீமன் கிட்ட கதையக்கேட்டேன் அப்படின்னு பாடி நம்ம கிட்ட அன்பையும் கேட்டிருக்காரு அது வழமையா அவர் கேட்கிறதுதான் எண்டாலும்...

அந்தப்பாட்டுல குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடினது கூட ஒண்ணும் பெரிசா எபெக்ட் ஆகையில்லை. ஏன் இன்னொரு பாட்டுல அஸினுக்கு இவர் செய்த மாதிரி நயன்தாரா இவருக்கு செய்தது கூட பொறாமையாத்தான் இருந்தது( சீனை பாக்க முன்னமே இதுதான் எண்டு விளங்கிட்டுது ஆனா பாட்டுலயும் காட்டுகினை அஸினை) இதெல்லாம் பெரிசில்லை ஆனா...

அவர் கடவுளிட்டை கேட்ட வரம்தான் எனக்கு பெரிய பாதிப்பை கொடுத்திடுச்சு...
"கடவுள் என் வரம் வேணும்னு கேட்டா
அகதியான மக்களுக்கு
அமைதியான நாடு கேட்பேன்"


அப்படின்னுட்டாரு...
(என்ன எல்லாருக்கும் பிழைப்புத்தேடுற விசயமாப்போச்சு எங்கடை நிலமை)


ம்ம்ம்...கடவுள் எப்ப வந்து....எப்ப வரம் குடுத்து...அது எப்ப நடந்து...கடவுளே! உனக்கு காதிருந்தா!! (முதல்ல கடவுள் இருக்ககிறாரோ எண்டுறது கேள்வி)இருந்தா விஜய் அண்ணாச்சிக்கொரு வரம் கொடுக்க கூடாதா...?

"வில்லு பவர் புல்லு" - விஜய் அண்ணன் இது போதும் உங்களுக்கு அதை விட்டுட்டு தேவையில்லாத விசயங்களுக்கள்ளை தலைப்போடக்கூடாது பிறகு ரசனி அங்கிள் மாதிரி நிறைய பதிலுகள் சொல்ல வேண்டியும் மன்னிப்பு அறிக்கைகள் விட வேண்டியும் வரும்!

ஆ இன்னுமொண்டு இருக்கு... அதுதான் முக்கியம்!

சில விசயங்களை கேட்கிறதைவிட பாக்கிறதுதான் இன்ரஸ்டிங்கா இருக்கும,ஸீ மீ இன் ஆக்சன்! (see me in action)

அது! அது போதும் உங்களுக்கு!

உதைத்தான் இப்ப பெரும்பாலான பதிவர்களும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கினை
சோ ...ஸீ தெம் இன் ஆக்சன்... (so...see them in action!)

1 comments:

said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்