நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.




யாரோ ஒரு முகம்தெரியாதவன் மரித்துப்போனது கேட்டும்
யாரையும் அறியாத பிஞ்சு முகங்களில் குருதி தெறித்தது பார்த்தும்
ஏதுமறியாத சனங்களென பொங்கியெழுந்த
புலம்பெயர்ந்த முகங்களும் அடங்கிப்போயின
காலத்துக்குமென்றிருந்த தலைவனும் கடைசியில்
யாருக்கும் தெரியாத கதைகளோடு கொலையுண்டுபோனான்
நானென்றும் நீயென்று வந்த புதிய தலைவர்களும்
சிறையென்றும் தனித்தென்றும் காணாமல் போயினர்.
மீதமிருந்த மீட்பர்களுக்கு நடுவே நடந்த போட்டியில்
பழைய கூத்தாடியே மாலை அணிந்தான்
இந்தா பிடி புதிய கதையென எல்லோரும் சொன்னார்கள்
இதுதான் கடைசியென்ற எல்லோரும் செத்துப்போனார்கள்
உண்மையைச்சொல்லப்போனால் எல்லா நான்களும்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.





படங்களுக்கும் எழுதியிருக்கிற சொற்களுக்கும் நிச்சயமாய் தொடர்பிருக்கிறது. அக,புற தொன்ம, நவீன, பின்நவீன, இருத்தலிய என்று எந்த இழவை விரும்பினாலும் போட்டுப்பார்த்து என்ன தொடர்பு என்று கண்டறியவும. இருக்கப்படாமல் இன்று என்னுடைய இந்த பக்கத்துக்கு வந்த எனக்கு அடுத்த கட்ட பரபரப்புக்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது.

பக்ககுறிப்பு: குத்தி முறிக்காமல் சொன்னா கேளுங்கோ, ஒழுங்கா வேலையைப்பாருங்கோ.