சொல்ல விரும்பாதவை: 28-01-2009

இரண்டு நாள் பயணமாக மகிந்தவின் அழைப்பபை ஏற்று இலங்கை வந்த பிரணாப்; இரவுல வந்து இரவுலயே போட்டாராம் (உல்லுக்கா பட்டே).என்ன இழவுக்கு வந்தவரோ சில வேளை மச்சான உனக்கொரு விருந்திருக்கு வந்துட்டுப்போ எண்டு மஹிந்தவும் காவி உடுத்தின பேய்களும் சொல்லிச்சினையோ தெரியாது.

கொல்லுங்கோ ஆனா எங்களுக்கு பிரச்சனை வராத அளவக்கு கொல்லுங்கோ எண்டுறமாதிரிதான் இருக்குது உந்தக்கதை யுத்தத்தை நிப்பாட்டுங்கொ எண்டால் கொல்லுறதை குறையுங்கோ எண்ட ஆலோசனை வழங்கல், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் மாமன் மச்சான சந்திப்பு மாதிரி நடந்திருக்கு மஹிந்தவும் முகர்ஜியும் சந்திச்சது.


எனக்கென்ன கவலை எண்டால் வந்தவர் கிரிக்கெட் மச்சைக்கூட பாக்காமல் போயிட்டாரே
(சே வடை போச்சே) அதான்!

இப்படியானதொரு அரசு இருப்பதனால்தான் இந்தியாவில் குண்டு வெடிக்கிறது!!!


//

பாகிஸ்தானுக்கு போக மறுத்த இந்திய கிரிக்கெட்டீம் இலங்கைக்கு விளையாட வந்த நியாயம் என்ன?! அவர்களது உணர்வுகள் எனனாயிற்று மும்பை குண்டுவெடிப்புகளுக்காகவும் தாக்குதல்களுக்காகவும் மட்டும் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்தார்கள் என்றால்;(மனதுக்குள்ள பயமும் இருக்கும் நிறைய வாயைக்குடுத்திட்டம் போனா ஆராருக்கு உயிர் போகுதோ தெரியாதெண்டுறதும் இருந்திருக்கும்) இத்தனை அவலங்களுக்கிடையிலும் விளையாடுவதற்கு இலங்கைக்கு எப்படி வர முடிந்தது.

இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் நாடு இருக்கிற பரபரப்புக்குள்ள, ஒரு பக்கத்துல சனம் செத்து விழுந்து கொண்டிருக்கு இன்னொரு பக்கத்துல விளையாடுகிறார்கள் யாரோ சொன்னது போல தமிழனின் அவலம் உலகத்தாருக்கு கிரிக்கெட் ஸ்கோர் கேக்குறமாதிரிதான் இருக்கு!!!

என்ன கேவலமான உலகமிது என்ன மக்கள் இவர்கள் உங்கடை நாடு உருப்பட்டாப்புலதான்! இதுல இலங்கை டீம் காரருக்கு எங்க போச்சுது மண்டை அவரொருத்தர் நான் மாறிட்டன் நீங்கள் மாறல்லையோ எண்டு விளம்பரம் கொடுத்தாராம் முதல்ல உங்கடை இயல்புகளை மாற்றுங்கோ, காசிருந்தா மட்டும் காணாது கொஞ்சம் சிந்திக்கிற ஆற்றலுமத் தேவை பாருங்கோ, முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்கள் இப்படி கேவலமா இருக்கலாமே?


என்ன இழவை செய்கிறார்கள் இந்த இளைய சமுதாயத்தினர் தமிழ் நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கிற மாணவர்களுக்கிருக்கிற அக்கறை கூட இவர்களிடம் இல்லையே அவர்களுடைய நாடு, அவர்களுடைய தோழர்கள், அவர்களுயைட உறவினர்கள், அவர்களுடன் வேலைசெய்பவார்கள், நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு கொடுப்பவர்கள்,என்று ஒரு சின்ன உணர்வு கூட இல்லையா இந்த மாணவர் சமுதாயத்துக்கு!

மாணவர் சக்கதி மஹாசக்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் முயன்றாலே போதுமானது இந்த யுத்தத்தை நிறுத்தவும் சுமுகமான தீர்வொன்றை முன்னெடுக்கவும் ஆனால் செய்கிறார்கள் இல்லையே.

முன்பே சொன்னது போல திருந்தினால் இலங்கையியன் மயிராண்டிகள் திருந்த வேணும் இல்லையெண்டால் இலங்கையை மீட்டெடுக்கமுடியாது...

சிந்தனை வளர்சச்சியும் புரட்சியும் இல்லாத சமுதாயங்கள் முன்னேறியதாக சரித்திரமே இல்லை தமிழ் பேசுகிறவ்ர்கள் இலங்கையில் இல்லாமல் போனால் இலங்கையின் அடிப்படை நாகரிகமே வேறுமாதிரி இருந்திருக்கும், மற்றய நாடுகள் வந்து வேறெதுவும் செய்துவிட்டுப்போகிற சின்த்தீவாகத்தான் இருந்திருக்கும்...

2 comments:

said...

/முன்பே சொன்னது போல திருந்தினால் இலங்கையியன் மயிராண்டிகள் திருந்த வேணும் இல்லையெண்டால் இலங்கையை மீட்டெடுக்கமுடியாது.../

சரியாகச் சொன்னீர்கள்
எழுந்து இருப்பதற்காக
இருந்தாலும் தங்களின் கையை
ஊன்றி தான் எழு வேண்டும்

அடுத்தவனை அழைப்பது என்பது
அவன் தமிழன் இருந்தாலும் ( என்னையும் சேர்ந்து தான் )
வருவான் என நினைப்பது
மடமை என தோன்றுகிறது

ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு இப்படி தான் நினைக்க தோன்றுகிறது

said...

Nice post
we are invite you to join now in bloggers unit..