பார்க்க விரும்பாத படங்கள்...!

ஜப்பானின் படங்களை பதிவாக்கிய அடுத்த நாளே இந்தப்படங்களை பதிவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்பொழுதிலிருந்த மனோ நிலையில் பதிவாக்கத்தோன்றவில்லை. கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது படங்களை பல தளங்களில் இருந்து தரவிறக்கி வைத்திருந்தேன்,இன்று அவற்றை சிலருக்கு மின்னஞ்சலும் செய்திருக்கிறேன்.

அப்பொழுதுதான் பதிவாக்கலாம் என்கிற எண்ணத்தையும் செயல் படுத்தலாம் என்று தோன்றியது.

படங்களை பார்க்கும் பொழுது தோன்றிய என் பல விதமான சிந்தனைகளையும் குறிப்புகளாக எழுதினாலே அது ஒரு புத்தகம் அளவுக்கு நீளும் என்பதால் படங்கள் மட்டும்

வன்னியில் எடுக்கப்பட்ட படங்கள்.தற்பொழுது நிலமை மேலும் கவலைக்கிடம்.

போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!

பின்குறிப்பு அல்லது குமுறல்:

1)"மச்சான் லங்காவே ஜெயசூரியா நத்தங் பா மச்சான்"

2)"நாங்கள் ஐடியா கப்பும் பாத்தம்...மென்டிஸ் சுப்பர் போலிங் மச்சான்"

3)நான் இருக்கிற இடத்தில் எனக்கு இணையம் பயன் படுத்தக்கூடிய வசதி கிடைத்திருப்பதனாலலும் என்னிடம் வாசிக்கிற பழக்கம் இருப்பதனால் நான் சில நாட்களில்; தேவையான அல்லது குறிப்புகள் எடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அவற்றை பிரதி எடுத்து சென்று அறையில் வைத்து படிப்பது வழக்கம் என்பதனாலும் என்னிடம் தம்பி நாட்டு நிலமைகள் எப்படி என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற பதில் "அண்ணன் நான் அதுகள் பாக்கிறல்லை அண்ணன்"

9 comments:

said...

அகதியாகியே தெருவின் ஓரமாக திரிகிறோம். அடிமை மாடுகள் போல என்றும் அலைகிறோம். பட்டகாலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பதற்கெல்லாம் ஈழத்தமிழன் நல்ல உதாரணம். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது. வெந்த புண்ணிலே வேல் பாய்ந்தது. என்பதற்கெல்லாம் உதாரணமும் அவந்தான். இல்லையென்றால் இடம்பெயர்ந்தோர் மீது நேற்று நடத்தப்பட்ட தக்குதலில் 2பச்சிளம் பாலகர் உட்பட ஐவர் உயிரை விட்டது இந்த உலகை உலுக்கவில்லைதானே? சர்வதேசமே கண்திறந்து பார்.

said...
This comment has been removed by the author.
said...

வார்த்தைகள் தேவை இல்லை.படங்களே உணர்த்தும் வலிகளை. வலிக்காமல் வாழ்க்கையில்லை. அதுக்காக இப்படியா? என்றுதான் நாம் சுதந்திரமாக சோறு தின்னுவது. சோற்றுக்குள் கைவைக்கும் போதெல்லாம் வாயை மட்டுமல்ல காதையும் திறக்க வேண்டி உள்ளது. எங்காவது எறிகணை வருகிறதா? அல்லது வானில் வல்லரக்கர் வட்டமிடுகிறாரா என்று. இது என்ன கொடுமை. என்று உடையும் இந்த அடிமை விலங்கு.

said...

//போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!//

வருத்தமாக இருக்கிறது கிங். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை :-(

said...

கதியால் said...
\\
அகதியாகியே தெருவின் ஓரமாக திரிகிறோம். அடிமை மாடுகள் போல என்றும் அலைகிறோம். பட்டகாலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பதற்கெல்லாம் ஈழத்தமிழன் நல்ல உதாரணம். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது. வெந்த புண்ணிலே வேல் பாய்ந்தது. என்பதற்கெல்லாம் உதாரணமும் அவந்தான். இல்லையென்றால் இடம்பெயர்ந்தோர் மீது நேற்று நடத்தப்பட்ட தக்குதலில் 2பச்சிளம் பாலகர் உட்பட ஐவர் உயிரை விட்டது இந்த உலகை உலுக்கவில்லைதானே? சர்வதேசமே கண்திறந்து பார்.
\\

வருகைக்கு நன்றி நட்பே...

நானும் அறிந்தேன் பலருக்கு அந்த துயரத்தை மின்னஞ்சல் செய்திருக்கிறேன்...

said...

தமிழ் விரும்பி said...
\
வார்த்தைகள் தேவை இல்லை.படங்களே உணர்த்தும் வலிகளை. வலிக்காமல் வாழ்க்கையில்லை. அதுக்காக இப்படியா? என்றுதான் நாம் சுதந்திரமாக சோறு தின்னுவது. சோற்றுக்குள் கைவைக்கும் போதெல்லாம் வாயை மட்டுமல்ல காதையும் திறக்க வேண்டி உள்ளது. எங்காவது எறிகணை வருகிறதா? அல்லது வானில் வல்லரக்கர் வட்டமிடுகிறாரா என்று. இது என்ன கொடுமை. என்று உடையும் இந்த அடிமை விலங்கு.
\

உண்மைதான் சமீபத்தில் நான் எழுதிய வரிகளில் இந்த கொடுமையையும் எழுதியிருக்கிறேன் ஆனால் பதிவாகவல்ல...

இது தேடிக்கொண்ட வாழ்க்கை...

said...

கிரி said...
\
//போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!//

வருத்தமாக இருக்கிறது கிங். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை :-(
\

வாங்க கிரி
இதில் சொல்வதற்கு என்ன கிரி இருக்கு..

பெருமைக்குரிய ஸ்ரீலங்கன்ஸ் ஒருத்தருக்கும் என்னையும் சேர்த்து சிந்தனை வளர்ச்சி போதவில்லை என்பதை தவிர

நாட்டில எல்லாம் நடக்கிறது ஆனால் இந்த கொடுமைகளை கவனிப்பார் யாருண்டு...

said...

\
மீது நேற்று நடத்தப்பட்ட தக்குதலில் 2பச்சிளம் பாலகர் உட்பட ஐவர் உயிரை விட்டது இந்த உலகை உலுக்கவில்லைதானே? சர்வதேசமே கண்திறந்து பார்.
\

சர்வதேசம் கண்திறது பிரயோசனம் இல்லை முதலில் இலங்கையில இருக்கிறவையளும் புலம்பெயர் குடிகளும (இவைதான் முக்கியம்)கண்ணைத்திறந்தால் போதும்...
அப்படி அறிவு இல்லையென்றால் இப்பொழுதிலிருக்கிற இலங்கை இல்லாமலே போகட்டும்...

said...

தமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)

இனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.

"நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி ஹிட்டுக்காக அலையும் ஆளில்லை" என்பதை இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் புரிந்துகொள்வீர்கள்.

http://tamizh2000.blogspot.com/2008/07/blog-post_5651.html