சொல்ல விரும்பாதவை - 10.08.08

கொம்பனித்தெருவை

சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்

பத்து ரூபாவைக்காட்டி பிச்சைக்காரார்களை

அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்

சொறி நாய்களை பிடித்து அடைத்திருக்கிறார்கள்

சார்க் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்கள்..

கோவணத்ததை கழுவி

கொடியா ஏத்தினாலும்

கோவணம் கோவணம்தானே...

கும்பிடுவதற்கு விரும்பினால்

தொணடர்கள் கிடைக்கலாம்

நம்புவதற்கு...

2 comments:

said...

:(((((((

said...

முகமூடிகள் எல்லாம்
ஒருநாளில் மாறும்.

அந்நாள்
நியாயங்களின் நாளாகும்.

நியாயமே முள்ளாகும்.
நியாயமே புயலாகும்.
நியாயமே தீயாகும்.

முகமூடிகளை
கிள்ளியெடுத்து
ஓரங்கட்டி
எரித்துவிட

நியாயமே தீயாகும்.

-ஆர்.நிர்ஷன்