தியாக தீபம் திலீபன் என்கிற பெயர் அவனுக்கு எத்துணை பொருந்திற்று...
அவன் தியாகத்தின் முழு உருவம்தான்...
திலீபனின் இறுதி நாள் நினைவுகள் இன்று. காந்திக்கு மஹாத்மா என்று கொண்டாடிய இந்திய தேசம் ஒரு தமிழ் இளைஞனின் உயிரை சொட்டுச் சொட்டாக பன்னிரண்டு நாட்கள் பருகி தங்களது அகிம்சை முகத்திரை கிழிந்து கொடூர முகத்தை வெளிக்காட்டி பன்னிரண்டாவது நாள் எது எப்படி இருந்தாலும் திலீபனின் தியாகமும் இந்தியாவின் துரோகமும் மறக்க இயலாத சில விடயங்களை இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் தந்திருப்பது உண்மை...
மறைந்து எத்தனை வருடங்களானாலும் நல்லுரின் வீதியில் மூட்டிய வேள்வித் தீயின் உணர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை என்பது உண்மை எவரொருவருக்கும் மாற்றுக் கருத்தில்லாமல் மனதார நேசிக்கிற ஒருவனாக திலீபன் இருந்தான், இருக்கிறான் என்பதும் உண்மை...
ஈழமும் போராட்டமும் பலவேறு திசைகளில் பயணப்பட்டு பல மாற்றங்களை சந்தித்திருந்தாலும் திலீபன் கேட்ட மாற்றங்களும் இன்னமும் நிகழவில்லை என்பதும் உண்மை...
யுத்தம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் நாடு நல்லா இருக்க வேண்டும்...
12ம் நாள்...
நன்றி :
யாழ் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கம் திலீபனின் 20 வது ஆண்டு நினைவு ஒலிக்கோப்பு...
மதியம் வெள்ளி, செப்டம்பர் 26, 2008
திலீபனின் இறுதிநாள் நினைவுகள்...
Posted by
King...
at
0
comments
Labels: ஈழவரலாற்றில்...
மதியம் செவ்வாய், செப்டம்பர் 23, 2008
(மறைந்த)தோழர் சில்க் ஸ்மிதா...!
பதிவின் தலைப்புக்கு தோழர் லக்கிலுக் காரணமாயிருக்கலாம் ஆனால் பதிவுக்கு அவர் காரணமல்ல...!
சில்க ஸ்மிதா இந்தப்பெயர் ( சிலுக்கு என்ற பெயர்தான்) தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அலை இன்னமும் ஓயவில்லை அது தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வயது வித்தியாசமின்றி ஏற்படுத்திய தாக்கங்களை நான் சொல்லி தெரியவேண்டும் என்பதற்கல்ல!
விஜயலட்சுமி என்கிற இயற்பெரில் சாதாரண குடும்பத்தில் ஆந்திராவில் பிறந்து தமிழ் நாட்டைக் கலக்கிய கவர்சிப் புயல் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி சென்னையில் அவருடைய அப்பார்டமென்டில் தற்கொலை செய்து கொணடதாக சொல்லப்படுகிற சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்பது மிகையல்ல. அவரது எச்சில் பட்ட அப்பிளுக்கு தமிழ்நாடே காத்திருந்ததாக நான் குமுதம்,ஆனந்தவிகடன் களை வாசிக்கத்தொடங்கிய நாட்களின் ஆரம்பத்தில் படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு தோழர் சிலுக்கு தமிழ் சினிமா ரசிக நெஞ்சங்களில் குடியிருந்தார்.
அவர் பல மொழிகளில் பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் எனக்கு தெரிந்தவையும் குறிப்பிடத்தக்கவையும் என்றால் கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, ஸ்படிகம் இவைகள்தான்.
அவர் நடித்த படங்களை விட ஆடிய படங்கள்தான் அதிகம் என்பதுதான் உண்மை அவருக்கென்றே அமைத்தது போல நடனங்களும் அதற்கு அவர் கொடுக்கிற அசைவுகளும் அவருக்கே உரிய தனி ஸ்டைலில் இருக்கும். (பொன் மேனி உருகுதே) ஆனால் அவர் ஆடிய பாடல்களும் படங்களும் பல இருந்தாலும் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருகிற தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ( தமிழகம் மட்டுமல்ல) ரகசியமாய் ஒலிக்க விடப்பட்ட பாடல் நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடிதான்...கமலும் சிலுக்கும் கலந்தாடிய அசைவுகளில் அந்தக்காலத்து தமிழ் சினிமாவே அசைந்திருந்தது, தமிழ்நாடே அதிர்ந்திருந்தது,ரஜினியின் சிவாஜி படத்தில் கூட இந்தப்பாடலைத்தான் எடுத்துக்காட்டியிருப்பார் ஷங்கர்.
பலருடைய தூக்கத்தை பறித்த பாடல் இது...!
நேத்து ராத்திரி...
1979 இல் வண்டிச்சக்கரம் படம் மூலம் சிலுக்கு என்ற பெரில் தமிழ் நாட்டை மகிழ்வித்த கறுப்பு கவாச்சி நடிகை தோழர் சில்க் ஸ்மிதா கடைசியில் தமிழ் நாட்டிலேயே தனது உயிரையும் பிரிந்திருந்தர் அவருடைய மரணமும் மறைவும் பல சர்ச்சைகளை கொண்டிருந்தாலும் அவர் பல இதயங்களில் இடம் பிடித்திருந்தார் என்பதும் அவசரது ரசிகர்களை அவர் ஒரு நாளும் ஏமாற்றியதுமில்லை என்பதும் அவருக்கு இன்றும் இருக்கும் ரசிகர்களின் மூலம் நாம் கண்டுகொள்ளலாம் । நடிக்கும் பொழுதும் சரி மறைந்த பிறகும் சரி சர்ச்சைகளோடேயே இருந்த சிலுக்கு தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது .
எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க இயலாத ஒருவர் தோழர் சில்க் ஸ்மிதா...!
பி கு :
* தோழர் சிலுக்கு நடித்த 'தங்கத்தாமரை' என்கிற வெளிவராத படம்தான் அவர் கடைசியாக நடித்த படம் என்று சில தகவல்கள் சொல்கிறது அந்தப்படத்தின் இயக்குனரான திருப்பதிராஜா தோழர் சில்க் ஸ்மிதாவைப்பற்றி ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதினார் என்று ஒரு தகவலும் இருக்கிறது ஆனால் அது பற்றிய விபரம எனக்கு தெரியவில்லை...
* சும்மா ஒரு மாறுதலுக்காக சிலுக்கு!
Posted by
King...
at
0
comments
Labels: பதிவுலக குறிப்புகள்...
மதியம் வியாழன், செப்டம்பர் 18, 2008
திலீபனின் நான்காம் நாள்...
பல நாட்களாக இணையப்பக்கம் வர முடியவில்லை அதனால் பதிய வேண்டும் என்று நினைத்த பல விடயங்கள் பதியப்படாமல் இருக்கிறது.இருக்கிற சூழலில் இருக்கிற மிக நெருக்கமான விடயம் இணையம் மட்டுமாகத்தான் இருந்தது அதற்கும் தற்பொழுது சிக்கல வந்திருக்கிறது.
புரட்டாதி 15ம் திகதி தியாகி திலீபனின் நினைவு நாட்கள் ஆரம்பமாகியிருக்கிறது வடக்கிலங்கை தற்பொழுது இருக்கிற நிலையில் அதனை நினைவு கூர்கிற நிகழ்வுகள் எந்தளவு இருக்கிறதென்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னிடம் அவன் நினைவுகளை அழிக்க முடியவில்லை...
ஒரு போராளி என்பதிலும் அவன் இயல்புகள் வகையாகத்தான் என் மனதுக்கு அவன் நெருக்கமாயிருக்கிறான்.நிறைய பதிந்து போயின அவனுடைய நாட்களின் நினைவுகளும் அவற்றை நான் சிறுவயதில் நினைவு கூர்ந்த நிகழ்வுகளும்...
எப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் துளிகளை வரவழைத்து விடுகிற காட்சிகள் அவன் உண்ணாவிரதம் இருந்த காட்சிகளும் அதன் நினைவுகளும்...
ஈழத்தின் அனைவர் மனதிலும் அவனுக்கென்று தனி இடம் இருந்தாலும் என் மனதில் அவனுக்கு முதலிடம் இருந்தது ஈழ வரலாற்றில் எனக்குள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது இவன் மட்டும்தான்...
உயிரை சொட்டுச்சொட்டாய் விட்ட வீரன், உண்மை மாவீரன் அவன்! அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த கொள்கைப்பிடிப்பும் மன உறுதியும் தியாகமும் சாமானியர்களால் முடியாத காரியம்.
ஈழ வரலாற்றில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் என்றும் என் மனதில் மாறாத இடத்தில் இருப்பது திலீபன்தான் அர்த்தமுள்ள போராளி அவன்! அவனுடைய காலத்தில் அந்த போராட்டத்துக்கு அவசியமும் அர்த்தமும் இருந்தது;
இப்பொழுது...
http://www.youtube.com/watch?v=QvjaJk81ZC8&feature=related
Posted by
King...
at
10:04 PM
0
comments
Labels: ஈழவரலாற்றில்...