புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!

வலைப்பூக்கள் இவ்வளவு இலகுவானதாய் இருப்பதில் இருக்கிற அசௌகரியம் திரட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இணையச்செய்திகளை எடுத்துக்கொண்டு புழுகிறவர்கள் அதிகமாகிப்போனார்கள், தமிழ்மணத்தில் ஒரு பதிவு 10 நிமிடங்கள் முகப்பிலிருப்பதே பெரிய விசயமாகிவிட்டது! நல்ல எழுத்துகளை வாசிக்க முடியவில்லை நான் ஒரு வாசகன் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்பகிறேன்.

புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள் என்பது ஆரோக்கிமான விசயம். ஆனால் இணையத்தள செய்திகளை வெட்டி ஒட்டுவதிலும்; சில நகைச்சுவைகளை,அனுபவங்களை பகிர்வது ஆரோக்கியமானது என நான் நினைக்கிறேன். விருப்பட்டால் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என படங்கைளப்போட்டே தாங்களும் எழுதுகிறவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.


உதாரணமாய் இன்றய தற்பொழுது தமிழ் மணத்தில் முகப்பிலிருக்கிற பிரதான இடுகைகளில் எத்தனை பதிவுகள் உருப்படியானவை என்று பார்ததால்...தமிழ் மணம் குப்பைகளை திரட்டுவது தெளிவு தமிழ்மணத்துக்கு வந்த சோதனை!


____________________________________________


கொழும்பின் விமானத்தாக்குதல் வெட்டி ஒட்டுகிறவர்களுக்கும் 'திடீர்' பதிவர்களுக்கும் அவரவர் வலையில் குப்பைகளை போடுவதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு செய்தி இவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை!இவர்கள் தங்கள் வலையில் குப்பைகளை சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை திரட்டிகளை நெருக்கடிக்கள்ளாக்கி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிற வீணான பரபரப்புகள்தான் வெறுப்பை தருகிறது.

எனக்கு இப்பொழுதிருக்கிற கோபம் சங்கடங்கள் மற்றும் சந்தியில் நின்று கதைப்பவர்கள் போன்றவர்களால் உருவாகுகிற வீணான பரபரப்புகள் மீதுதான்.எனக்கென்றால் விளங்கவில்லை திடீரென்று எங்கிருந்து எழுத வந்தார்கள் இவர்களென்பது,பிரச்சனையின் தார்ப்பரியம் தெரியாமல் உணர்ச்சிவசப்படுகிற விசயம் அல்லல இது.


பெரிய காமெடிகள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஊரில் பத்திரிகைகளுக்கு எழுதியவர்களாம், ஆக்கங்கள் எழுதி அனுப்பியவர்களாம், என்ன நேயர் விருப்பம் எழுதின ஆக்கள் எல்லாம் அரசியல் பேச வந்தால் இப்படித்தான் இருக்கும்,குடும்பச்சண்டைக்கே நேரம் போதவில்லை இவர்களுக்கு!!


நாட்டில் சமாதானம் தேவை என்பதும் யுத்தநிறுத்தம் அவசியம் என்றும் கதறுபவர்களாய் இவர்கள் இருக்கையில் இப்படியான அதே புரிதல்கள் இல்லாத சிங்களவர்கள் போல் புழுகுவது சகிக்க முடியாத ஒன்று .


சிங்களவர்கள் யுத்தத்தின் விளைவகளை நேரடியாக அனுபவிக்கவில்லை என்பதும் இந்த யுத்தத்தின் நீடிப்புக்கான இன்னொரு வலுவான காரணம் என்பதுதான் என் எண்ணம்.இரண்டு பக்கமும் யுத்தத்தை வலிகளோடு உணர்ந்திருப்பின் தலைமுறைகள் கடந்தும் இது நீடித்திரக்காது என்பது உண்மையாய் இருக்கலாம்.


நல்ல வாசிப்பகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுக்கக்கூடிய ஊடகமாய் வலையுலகம் இருப்பது உண்மை. அதற்கு திரட்டிகள் தருகிற பங்கும் அவசியமானதாகிற்று! அவை இப்படியான குழப்பங்களால் வீணாக்கப்பட்டுக்கொண்டிருப்பது தொடர் வாசகனாகிய என்னைப்போனறவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதும் உண்மை.

__________________________________________________


நீங்கள் எழுதுவதை நாலுபேர் வாசிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சமான புரிதலாவது உங்களுக்கு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எழுதுகிற விசயத்தில் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும் இல்லையேல் எழுதாமல் இருக்கலாம்! நாளுக்கு மூன்று பதிவு போட்டே அகவேண்டும் என்றிருப்பதை விட நான்கைந்து பதிவுகளை கூடுதலாய் வாசிப்பது நலம். அல்லது இருக்கவே இருக்கிறது பின்னூட்டங்கள் விரும்பிய அளவுக்கு எழுதலாம் இதன் மூலம் நன்றாக எழுதுவபர்களை ஊக்குவிக்கவும் முடியும்.

திருந்துங்கப்பா!!

____________________________________________________

எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.

11 comments:

said...

:(

said...

கிங் ஃஆப் மார்ஸ்.. :)

நமக்கு பிடித்த எழுத்தை படிச்சிட்டு போயிக்கிட்டே இருக்கலாம்..

இந்தியர்களுக்கு ஒரு (கெட்ட) பழக்கம் நம்மை நாம் கவனித்து நம்முடைய தவறை திருத்துவதை விட.. அடுத்தவரை நாம் பார்த்து நேரம் செலவழிப்பது அதிகம்.


அப்படி நீங்களும்...???

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எத்தனை பெரிய பாடகர் என்று தெரியுமா? அவரை நீ ஞானசூனியம் உனக்கு பாட்டு வராது என்று ஓடவிட்டார்கள். ஆனால் அவரை ஞானசூனியம் என்று இப்போது யாராலும் சொல்ல முடியுமா?

அப்படித்தான்ங்க... எந்த விஷயத்திலும் இருக்கும் நல்லதை மட்டும் பார்க்க நாம் கற்றுக்கொண்டால் நாமும் முன்னேறலாம் அடுத்தவர்களும் முன்னேறலாம்

குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தால்.. முடிவு இல்லைங்க.. :)

said...
This comment has been removed by the author.
said...

//எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.//

இதுக்கே இப்படியா?

இன்னும் எழுத வந்துட்ட்டா???? :)

said...

இன்னும் நல்லா நிறைய எழுதுங்க " கிங்ஸ் ஆஃப் மார்ஸ் " ஆனால் அடுத்தவர்களின் மீது உங்களின் கவனத்தை கொஞ்சமா குறைத்துக்கொள்ள பழகுங்கள் ...

நிறைய சாதிக்கமுடியும் ! :)

said...

கவிதா நிறைய எழுதுவிங்களோ கடை காத்துவாங்குதோ ஏதாவது பரபரப்பா தலைப்பு வச்சு எழுதலாமே...

நான் சொன்னது திரட்டிகளை நிறைக்கும் குப்பைகளைப்பற்றி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிறார்கள் வீண்பரபரப்புகளால் என்பது என் வருத்தமே ஒழிய அவர்கள் எழுதவதைப்பற்றி எனக்கெந்த கவலையுமில்லை தேவையான அளவு புரிதல் எனக்கிருக்கிறது சொல்லப்போனால் உங்களை விட அதிகமாக...

நல்ல பதிவுகளை... தேடிப்படிப்பதற்காகத்தானே திரட்டிகள் அந்த திரட்டிகளில் நிகழ்கிற இந்த ஓரங்கட்டல்தான் பிரச்சனை ஒழிய யார் எதை எழுதினால் எனக்கென்ன...

Anonymous said...

"புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!"//
புதிய பதிவர்கள் மட்டுமா அப்டி எழுதுறங்க?????

Anonymous said...

நல்லதுக எப்பவுமே ஒழிஞ்சுதான் இருக்கும், நாம தான் தேடிகண்டு பிடிக்கனும்!!!!

said...

எனக்கும் எழுத வராதுங்க


/கவின் said...

நல்லதுக எப்பவுமே ஒழிஞ்சுதான் இருக்கும், நாம தான் தேடிகண்டு பிடிக்கனும்!!!!/

சரி தான்

said...

நாம தேடிக்கண்டு பிடிக்கணும்கிற வேலையை இலகுவாக்கத்தானே திரட்டிகள் அதனை வெற்று பரபரப்புக்களால் மழுங்கடிக்கிறவர்களைத்தான் சுட்டி காட்டி இருக்கிறேன்...

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...