சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!

திறக்கப்படாத ஜன்னலுக்கு வெளியே..
வீசிக்கொண்டிருந்த காற்றில் எழுதப்பட்டிருந்தன
சிறுபான்மையினருக்கான சாசனங்கள்...
இவை எந்த தேவதூதனால் முன்மொழியப்படும் என்பது
அடிமைகளாய் இருக்கிற என் சந்ததிகளுக்கு தெரிந்திருக்கவில்லை
எதிர்பார்க்காத நேரமொன்றில் அனுமதியின்றி நுழைந்த
தேவதூதன் வேடமிட்ட சாத்தான்கள் வாசித்துப்போயின
புதிய தலைமுறை அடிமைகளுக்கான சாசனங்களை
பயங்கரவாதம் முடிந்து போக,
அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன...
அடிமைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு!

2 comments:

said...

கவிதையை வாசிக்கும்போது கண்ணீர் சுரக்கிறது. எங்கிருந்து வந்து விழும் எமது உறவுகளின் துன்பத்துக்கு ஓர் முற்றுப்புள்ளி.

said...

வருகைக்கு நன்றி பூபதி..!