சந்தோசத்தில் பெரிய சந்தோசம்...

2008 ம் பிறந்து கிட்டத்தட்ட ரண்டு மாசமாகுது என்னடா இவன் இன்னும் ஒன்றும் எழுதவில்லையெண்டு நீங்கள் கதைக்கிறது கேட்குது ஆனால் நான் என்ன சொல்ல பெயர் மட்டும் தான் King... இல்லப்பாருங்கோ பொறுப்புகளும் அப்படித்தான் இருந்தாலும் உங்கடை பூமியில நடக்கிற கூத்துகளை பாக்கும் பொழுது எதை எழுத எதை விட எண்டுற மாதிரி கிடக்கு அதோடை இலங்கையில் நடக்கிற விசயங்களை பாத்தால் அது; அதைப்பற்றி எழுதித்தான் என்ன,எழுதாமல் விட்டால்தான் என்ன எண்டுற மாதிரி இருக்கு அதனாலேயே இந்த வருச தொடக்கத்திலை போட வேண்டிய பதிவுகளையும் போடாமல் விட்டிட்டன்...
இப்பவும் வந்திருக்க மாட்டன் ஏனென்டால் புது வருசம் பொங்கல் காதலர் தினம் எண்டு வருசம் தொடங்கினதிலையிருந்து ஒரே வேலையும், அலுப்பும் ஆனாலும் மனம் முழுக்க சந்தோசமும் அமைதியும் ஒவ்வொரு நாளும் பூமியில சும்மா அந்த மாதிரித்தான் போய்க்கொண்டிருக்கு அட மறந்து போட்டன் எல்லோருக்கும் இதுவரை கொண்டாடின எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துக்கள்... என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான் ஏனெண்டு கேக்குறியளோ பின்ன என்ன பூமியில கொண்டாடுறதுக்கு எவ்வளளோ இருக்கு, படிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு, தெரிஞ்சு கொள்ளுறதுக்கு எவ்வளவோ இருக்கு, ரசிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு, ஆனால் நான் இங்க இருக்கப்போகிற நாள் கொஞ்சம்தானே அதாலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நானும் சந்தோசமா இருக்கிறது மற்றவர்களையும் சந்தோசமா பாக்கிறதெண்டு முடிவெடுத்திருக்கிறன் நீங்கள் என்ன சொல்லுறியள்...?
பின்ன என்ன பாருங்கோ சும்மா ஏதோ சம்பிரதாயத்துக்கு வாழ்த்துச்சொல்லுறதும் ஒரு போர்வைக்கு சிரிக்கிறதும் எனக்கெண்டால் சரியாப்படயில்லை என்னைப்பொறுத்தவரைக்கும் நான் சந்தோசமாக இருக்க வேணும் ஆனா அதுக்கு குறைஞ்சது என்னைச்சுற்றி இருக்கிற ஆக்களெண்டாலும் சந்தோசமா இருக்கோணும் so... என்ரை சுயநலத்துக்காக மற்றவர்களையும் சந்தோசப்படுத்தி பாக்கிறதெண்டு வெளிக்கிட்டன் பூமியிலதான் ஆரோ சொன்னவையள் சந்தோசத்திலையே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பாக்குறதுதான் எண்டு ஆரெண்டு தெரியாது ஆனால் ஏதோ ஒரு படத்திலை உங்கடை விஜயும் சொல்லியிருக்கிறார் சரி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு அதாலை அவசரமாப்போகவேணும் குறை நினையாதையுங்கோ என... அப்ப நான் போட்டு வாறன்...

1 comments:

said...

என்ன கொடும சார் இது? கிங் இற்கு வேலை அதிகமாச்சு போல...!