தமிழ்ச்செல்வன்


தமிழர்கள் வராற்றில் தனக்கென ஒரு இடத்தில் நிலைத்திருக்கும் தமிழ்ச்செல்வன் என்கிற பெயருக்கும் சக உயிர்களுக்கும் என்னுடைய இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்

எனக்கொரு குழப்பம் அறிவும் அனுபவமும் திறமையும் மிக்க தமிழ்ச்செல்வன் உங்களைவிட்டு போனதற்காக எல்லோரும் கவலைப்படுகிறீர்கள் ஏன் அவரைப் போகவிட்டீர்கள்.அது எப்படி நடந்தது ஒரு முக்கியமான பொறுப்புக்குரியவர் இருக்கிற இடத்தில் பொறுப்பாக எச்சரிக்கையாக இருக்கமாட்டாரோ சரி அந்த பொறுப்பான இடத்ததில் காவல் இருக்கமாட்டார்களோ அதுவும் எதிரிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் இருக்கும்பொழுது எச்சரிக்கை வேண்டாமோ அதுமட்டுமல்ல சில நாட்களுக்கு முன்புதான் நீங்கள் பெரிய ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி இராணுவத்தின் வயிற்றில் புளியை கரைத்தது மட்டுமல்லாமல் வயிற்றெரிச்சலையும் உண்டாக்கியிருந்தீர்கள் இப்படியிருகக் நீங்கள் எப்படி இராணுவத்தின் பதில் தாக்குதலை எதிர்பார்க்காமல் இருக்கலாம் சரி அதை விட்டாலும் காலையில் ஆறுமணிக்குத்தானே நடந்தது என்கிறீர்கள் விமானங்கள் வருகையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையா அந்த விமானத்தளத்தையே வேவு பார்த்து புலனாய்ந்த திறமைமிக்கவர்கள் ஒரு முக்கிய நபருக்குரிய பாதுகாப்பு விசயத்தில் இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பார்கள் எது எப்படி இருந்தாலும் போன உயிர் திரும்ப வராது இனிமேலாவது இப்படியான இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்ன நான் சொல்வது சரிதானே?

1 comments:

said...

காலம் பிந்திய விமர்சனம் என்றாலும் உண்மை இதுதான்.அந்த இடத்திலே பாதுகாப்பு பலமாகத்தான் இருந்தது.அவர்கள் விமானம் வரும்போது மிகவும் பாதுகாப்பான பங்கருக்குள்தான் இருந்தவை, ஆனால் போட்ட குண்டு போய் பங்கர் வாசலில விழுந்திட்டு,அதனாலதான் அவர்களால தப்பமுடியாம போய்ட்டு.இதைப்பற்றி விரிவா நான் என்னொடா பதிவில தளபதிகளின் என்ற தலைப்பில் எழுதியிருகிறேன்