விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!

உண்மைதான் ஊருக்கு தெரிந்தவன் என்ன செய்தாலும் பெரிய கதைகள்தான் போல.நடிகர் விஜய் யாரையோ பார்த்து சத்தம் போட்டாராம் அது பற்றிக் கொண்டுவிட்டது இவர்களின் இருக்கைகள் எங்கும். விஜய் கோபப்பட்டதையே அக்கறையோடு பேசுகிற தமிழர்களின் மெல்லிய மனதை யாரும் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுதும் கத்திக் கொண்டிருக்கிற தமிழர்களை கவனிக்கவும் அவர்கள் பிரச்சனையை அலசவும்தான் ஆளில்லாமல் போய்விட்டார்கள்.எப்படி இவ்வளவு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது உலக நாடுகளுக்கு.

இதில் பதிவுகள் சூடாகியது விஜய் சூடாகியதை விட பெரிய பரபரப்பு (இந்த சூடான இடுகைகள் பற்றிய விசயம் பலரும் ஆராய்ந்தது அது பற்றி வேறொரு முறை பார்க்கலாம்) முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல தமிழர்கள் எப்பொழுதும் அடுத்த பரபரப்புக்கு அலைகிற மனோநிலையில் இருப்பவர்கள்தான். வாயில் மெல்லுவதற்க்கு அடுத்த வீட்டு விசயம் என்ன இருக்கும் என்று அலைபவர்கள்தானே. கொஞ்ச நாள் சிவாஜி, கொஞ்ச நாள் கமல்-கொளதமி, கொஞ்சநாள் முத்துக்குமார் கொஞ்சநாள் ஒஸ்காரும் ரஹ்மானும் என்று மாறிக்கொண்டே இருக்கிறது அவர்களது பரபரப்புகள்.இந்த பரபரப்புகள் பற்றி சமீபத்தில் தமிழ் மண நட்சத்திரமாய் இருந்த அண்ணாச்சி சாத்தான் குளத்தான் நச்சென்று ஒரு குறிப்பு சொல்லியிருப்பார். மேற்குலகம் சரியாக கணித்ததும் பயன் படுத்துவதும் இந்த பலவீனத்தைதான், பொங்கிக் கொண்டிருந்தவர்களை ரஹ்மானை கௌரவித்து திசைதிருப்ப முயன்றார்கள்.


மின்னஞ்சலிலிருந்து பதிவுகள் பத்திரிகைகள் வரைக்கும் விழுந்தடித்து எழுதியிருந்தார்கள். என்ன பிரச்சனைனயோ அவருக்கு ஏதோ கோபப்பட்டு கத்தியிருக்கிறார் இதுக்கு இவர்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள் இதைப்பார்த்து நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.

_____________________________________________________

\\
இந்தப் பதிவுக்கும் விஜய் என்று நான் தலைப்பு வைத்திருக்கிறேன் ஆனால் இது சூடாகப்போவதில்லை என்பது நிச்சயம்.

\\
விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

\\
அதே போல பதிவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

6 comments:

said...

லேபிள் ஹிட்ஸ் தேடும் முயற்சி என்றே இருக்கே..

said...

/தமிழ் பிரியன் said...

லேபிள் ஹிட்ஸ் தேடும் முயற்சி என்றே இருக்கே./


நானும் இதை தான் யோசிச்சேன்...!

said...

// எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.//

புரிந்தால் புண்ணியம்.

said...

தமிழ் பிரியன் said...
\\
லேபிள் ஹிட்ஸ் தேடும் முயற்சி என்றே இருக்கே..
\\


விஜய், கோபம் என்றெல்லாம் லேபிள் போடுவதை விட இது நல்ல லேபிளாகப்பட்டது ஒரு உள் குத்து போல இருக்கவே அதையே வைத்துவிட்டேன்...

said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
\\
// எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.//

புரிந்தால் புண்ணியம்.
\\

என்ன செய்வது படிப்பவர்கள் இருப்பதால் எழுதுகிறேன்... :)

said...

பேச வேண்டி விடயத்திற்கு
மௌனிக்கின்றோம்.
பேச தேவையே இல்லாத
விடயத்திற்கு கொட்டமடிப்பதுதான்
இதுவரைகாலமும் நடந்துவருகின்றது.