வலைப்பூக்கள் இவ்வளவு இலகுவானதாய் இருப்பதில் இருக்கிற அசௌகரியம் திரட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இணையச்செய்திகளை எடுத்துக்கொண்டு புழுகிறவர்கள் அதிகமாகிப்போனார்கள், தமிழ்மணத்தில் ஒரு பதிவு 10 நிமிடங்கள் முகப்பிலிருப்பதே பெரிய விசயமாகிவிட்டது! நல்ல எழுத்துகளை வாசிக்க முடியவில்லை நான் ஒரு வாசகன் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்பகிறேன்.
புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள் என்பது ஆரோக்கிமான விசயம். ஆனால் இணையத்தள செய்திகளை வெட்டி ஒட்டுவதிலும்; சில நகைச்சுவைகளை,அனுபவங்களை பகிர்வது ஆரோக்கியமானது என நான் நினைக்கிறேன். விருப்பட்டால் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என படங்கைளப்போட்டே தாங்களும் எழுதுகிறவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
உதாரணமாய் இன்றய தற்பொழுது தமிழ் மணத்தில் முகப்பிலிருக்கிற பிரதான இடுகைகளில் எத்தனை பதிவுகள் உருப்படியானவை என்று பார்ததால்...தமிழ் மணம் குப்பைகளை திரட்டுவது தெளிவு தமிழ்மணத்துக்கு வந்த சோதனை!
____________________________________________
கொழும்பின் விமானத்தாக்குதல் வெட்டி ஒட்டுகிறவர்களுக்கும் 'திடீர்' பதிவர்களுக்கும் அவரவர் வலையில் குப்பைகளை போடுவதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு செய்தி இவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை!இவர்கள் தங்கள் வலையில் குப்பைகளை சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை திரட்டிகளை நெருக்கடிக்கள்ளாக்கி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிற வீணான பரபரப்புகள்தான் வெறுப்பை தருகிறது.
எனக்கு இப்பொழுதிருக்கிற கோபம் சங்கடங்கள் மற்றும் சந்தியில் நின்று கதைப்பவர்கள் போன்றவர்களால் உருவாகுகிற வீணான பரபரப்புகள் மீதுதான்.எனக்கென்றால் விளங்கவில்லை திடீரென்று எங்கிருந்து எழுத வந்தார்கள் இவர்களென்பது,பிரச்சனையின் தார்ப்பரியம் தெரியாமல் உணர்ச்சிவசப்படுகிற விசயம் அல்லல இது.
பெரிய காமெடிகள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஊரில் பத்திரிகைகளுக்கு எழுதியவர்களாம், ஆக்கங்கள் எழுதி அனுப்பியவர்களாம், என்ன நேயர் விருப்பம் எழுதின ஆக்கள் எல்லாம் அரசியல் பேச வந்தால் இப்படித்தான் இருக்கும்,குடும்பச்சண்டைக்கே நேரம் போதவில்லை இவர்களுக்கு!!
நாட்டில் சமாதானம் தேவை என்பதும் யுத்தநிறுத்தம் அவசியம் என்றும் கதறுபவர்களாய் இவர்கள் இருக்கையில் இப்படியான அதே புரிதல்கள் இல்லாத சிங்களவர்கள் போல் புழுகுவது சகிக்க முடியாத ஒன்று .
சிங்களவர்கள் யுத்தத்தின் விளைவகளை நேரடியாக அனுபவிக்கவில்லை என்பதும் இந்த யுத்தத்தின் நீடிப்புக்கான இன்னொரு வலுவான காரணம் என்பதுதான் என் எண்ணம்.இரண்டு பக்கமும் யுத்தத்தை வலிகளோடு உணர்ந்திருப்பின் தலைமுறைகள் கடந்தும் இது நீடித்திரக்காது என்பது உண்மையாய் இருக்கலாம்.
நல்ல வாசிப்பகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுக்கக்கூடிய ஊடகமாய் வலையுலகம் இருப்பது உண்மை. அதற்கு திரட்டிகள் தருகிற பங்கும் அவசியமானதாகிற்று! அவை இப்படியான குழப்பங்களால் வீணாக்கப்பட்டுக்கொண்டிருப்பது தொடர் வாசகனாகிய என்னைப்போனறவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதும் உண்மை.
__________________________________________________
நீங்கள் எழுதுவதை நாலுபேர் வாசிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சமான புரிதலாவது உங்களுக்கு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எழுதுகிற விசயத்தில் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும் இல்லையேல் எழுதாமல் இருக்கலாம்! நாளுக்கு மூன்று பதிவு போட்டே அகவேண்டும் என்றிருப்பதை விட நான்கைந்து பதிவுகளை கூடுதலாய் வாசிப்பது நலம். அல்லது இருக்கவே இருக்கிறது பின்னூட்டங்கள் விரும்பிய அளவுக்கு எழுதலாம் இதன் மூலம் நன்றாக எழுதுவபர்களை ஊக்குவிக்கவும் முடியும்.
திருந்துங்கப்பா!!
____________________________________________________
எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.
மதியம் சனி, பிப்ரவரி 21, 2009
புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!
Posted by
King...
at
11
comments
Labels: பதிவுலக குறிப்புகள்...
மதியம் திங்கள், பிப்ரவரி 16, 2009
சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!
திறக்கப்படாத ஜன்னலுக்கு வெளியே..
வீசிக்கொண்டிருந்த காற்றில் எழுதப்பட்டிருந்தன
சிறுபான்மையினருக்கான சாசனங்கள்...
இவை எந்த தேவதூதனால் முன்மொழியப்படும் என்பது
அடிமைகளாய் இருக்கிற என் சந்ததிகளுக்கு தெரிந்திருக்கவில்லை
எதிர்பார்க்காத நேரமொன்றில் அனுமதியின்றி நுழைந்த
தேவதூதன் வேடமிட்ட சாத்தான்கள் வாசித்துப்போயின
புதிய தலைமுறை அடிமைகளுக்கான சாசனங்களை
பயங்கரவாதம் முடிந்து போக,
அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன...
அடிமைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு!
Posted by
King...
at
2
comments
Labels: எல்லோரும் எழுதுவது...
Subscribe to:
Posts (Atom)