மதியம் வியாழன், மே 8, 2008

உனக்கு தெரியுமோ மச்சான்...1

*
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...

*
நாங்கள் பாடாத
பண்பாடோ
நாங்கள் பேணாத
கலாச்சாரமோ
நாங்கள் காட்டாத
மனித நேயமோ
நாங்கள் கவனிக்காத
மனித உரிமைகளோ
நாங்கள் நாடாத
சமாதானமோ
நாங்கள் பேசாத
சுபிட்சமோ
நாங்கள் செய்யாத
யுத்த நிறுத்தமோ
எவ்வளவு பார்த்திருப்போம்
முப்பது வருடங்களாக
அன்பையும் சந்தோசத்தையும் தவிர...

5 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//முப்பது வருடங்களாக
அன்பையும் சந்தோசத்தையும் தவிர...
//

ஈரமான வரிகள்...

Sen22 said...

//உனக்கு தெரியுமோ மச்சான்...
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...//

அருமையான வரிகள்...


Senthil,
Bangalore

Sen22 said...

//உனக்கு தெரியுமோ மச்சான்...
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...//

அருமையான வரிகள்...


Senthil,
Bangalore

King... said...

//முப்பது வருடங்களாக
அன்பையும் சந்தோசத்தையும் தவிர...
//

ஈரமான வரிகள்...///


ஈரமான வரிகள் மட்டுமல்ல நிர்ஷன் இலங்கையர்கள் மனதிலிருக்கிற ஏக்கமும் கூட நன்றி உங்கள் கருத்துக்களுக்கு...

King... said...

//உனக்கு தெரியுமோ மச்சான்...
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...//

அருமையான வரிகள்...///


நன்றி செந்தில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...