யாரோ ஒரு முகம்தெரியாதவன் மரித்துப்போனது கேட்டும்
யாரையும் அறியாத பிஞ்சு முகங்களில் குருதி தெறித்தது பார்த்தும்
ஏதுமறியாத சனங்களென பொங்கியெழுந்த
புலம்பெயர்ந்த முகங்களும் அடங்கிப்போயின
காலத்துக்குமென்றிருந்த தலைவனும் கடைசியில்
யாருக்கும் தெரியாத கதைகளோடு கொலையுண்டுபோனான்
நானென்றும் நீயென்று வந்த புதிய தலைவர்களும்
சிறையென்றும் தனித்தென்றும் காணாமல் போயினர்.
மீதமிருந்த மீட்பர்களுக்கு நடுவே நடந்த போட்டியில்
பழைய கூத்தாடியே மாலை அணிந்தான்
இந்தா பிடி புதிய கதையென எல்லோரும் சொன்னார்கள்
இதுதான் கடைசியென்ற எல்லோரும் செத்துப்போனார்கள்
உண்மையைச்சொல்லப்போனால் எல்லா நான்களும்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
படங்களுக்கும் எழுதியிருக்கிற சொற்களுக்கும் நிச்சயமாய் தொடர்பிருக்கிறது. அக,புற தொன்ம, நவீன, பின்நவீன, இருத்தலிய என்று எந்த இழவை விரும்பினாலும் போட்டுப்பார்த்து என்ன தொடர்பு என்று கண்டறியவும. இருக்கப்படாமல் இன்று என்னுடைய இந்த பக்கத்துக்கு வந்த எனக்கு அடுத்த கட்ட பரபரப்புக்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது.
பக்ககுறிப்பு: குத்தி முறிக்காமல் சொன்னா கேளுங்கோ, ஒழுங்கா வேலையைப்பாருங்கோ.
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
Posted by King... at 1 comments
Labels: எல்லோரும் எழுதுவது...
யாருக்கு வேணும் ஈழம்?!!!
மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை வருடங்கள் உயிரோடிருக்க முடியும்...
போங்கடா நீங்களும் உங்கடை ஈழமும்...!
ஒன்று மட்டும் சொல்லுவேன் "we are srilankans" இப்படி சொல்கிறவனின் பரம்பரையே தற்கொலை செய்யுமளவுக்கு கேள்விகளும் பதிலும் இருக்கிறது என்னிடம்.
Posted by King... at 2 comments
Labels: என்ன நடக்குது இலங்கையில…
கலைஞர் காட்டிய படம்...
இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ]
\\
உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:50.48 AM GMT +05:30 ] [ பி.பி.சி ]
\\
கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:29.22 AM GMT +05:30 ]
\\
ஒழுங்காக திட்டமிடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் நாடகம்...
களமுனைகள் அறியாத கனரக ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு...
அதிகார வர்க்கம் ஆடுகிற நாடகங்களும் அழிந்து போகிற சனங்களும்...
\\
படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம்.
Posted by King... at 5 comments
Labels: திருத்தவே முடியாது...
ஈழம்-சொல்ல விரும்பாதவை...!
____________________________________________________________________________
\\
பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்.
\\
வன்னியில் படையினர் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: இன்றும்(சனி) 32 பொதுமக்கள் படுகொலை; 75 போ் காயம்
\\
வன்னியில் 69 சதவீத சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிராந்திய சுகாதார பிரிவு அலுவலகம்
[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 03:20.42 PM GMT +05:30
\\
வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 04:55.55 AM GMT +05:30 ]
\\
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
\\
வேறொன்றும் சொல்லமுடியாமல் என்றல்ல இன்றய சூழ்நிலையில் நான் சொல்ல விரும்பவில்லை நான் சொல்வதற்கான நாட்கள் இதுவல்ல.
\\
ஈழத்தில் வாழ்வதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்...
மேலே எழுதப்பட்ட தலைப்பைத்தான் பதிவுக்கு வைக்கலாம் என்றிருந்தேன். வீணான பரபரப்பு தேடுவதற்கு நானொன்றும் ஊடகத்துறையில் இல்லையே! விருப்பப்பட்டால், எதையயேனும் எழுதலாம் என்று தோன்றினால் எழுதுபவன் அன்றி எழுதவேண்டும் என்று எழுதுபவன் அல்லவே.
படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம் tamilwin
Posted by King... at 1 comments
Labels: துயரத்தின் சாட்சிகள்...
விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!
இதில் பதிவுகள் சூடாகியது விஜய் சூடாகியதை விட பெரிய பரபரப்பு (இந்த சூடான இடுகைகள் பற்றிய விசயம் பலரும் ஆராய்ந்தது அது பற்றி வேறொரு முறை பார்க்கலாம்) முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல தமிழர்கள் எப்பொழுதும் அடுத்த பரபரப்புக்கு அலைகிற மனோநிலையில் இருப்பவர்கள்தான். வாயில் மெல்லுவதற்க்கு அடுத்த வீட்டு விசயம் என்ன இருக்கும் என்று அலைபவர்கள்தானே. கொஞ்ச நாள் சிவாஜி, கொஞ்ச நாள் கமல்-கொளதமி, கொஞ்சநாள் முத்துக்குமார் கொஞ்சநாள் ஒஸ்காரும் ரஹ்மானும் என்று மாறிக்கொண்டே இருக்கிறது அவர்களது பரபரப்புகள்.இந்த பரபரப்புகள் பற்றி சமீபத்தில் தமிழ் மண நட்சத்திரமாய் இருந்த அண்ணாச்சி சாத்தான் குளத்தான் நச்சென்று ஒரு குறிப்பு சொல்லியிருப்பார். மேற்குலகம் சரியாக கணித்ததும் பயன் படுத்துவதும் இந்த பலவீனத்தைதான், பொங்கிக் கொண்டிருந்தவர்களை ரஹ்மானை கௌரவித்து திசைதிருப்ப முயன்றார்கள்.
மின்னஞ்சலிலிருந்து பதிவுகள் பத்திரிகைகள் வரைக்கும் விழுந்தடித்து எழுதியிருந்தார்கள். என்ன பிரச்சனைனயோ அவருக்கு ஏதோ கோபப்பட்டு கத்தியிருக்கிறார் இதுக்கு இவர்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள் இதைப்பார்த்து நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.
_____________________________________________________
\\
இந்தப் பதிவுக்கும் விஜய் என்று நான் தலைப்பு வைத்திருக்கிறேன் ஆனால் இது சூடாகப்போவதில்லை என்பது நிச்சயம்.
\\
விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
\\
அதே போல பதிவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
Posted by King... at 6 comments
Labels: ஹிட் தேடும் முயற்சி...
கற்பிக்கப்பட்ட பாடம் - இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை முன்வைத்து!!!
நாட்டில் நடைபெறுவது என்ன நாம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலா இருக்கிறார்கள்?!
எப்பொழுது நிகழப்போகிறது இலங்கையில் ஒரு சிந்தனை மாற்றம்.?!
அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அந்த பொறுப்பிருப்பதாக எனக்கு படுகிறது அவர்களும் இலங்கையின் பெருமைக்குரிய பிரஜைகள்தானே?!
இனி...
லோஷனுக்கு ஒரு பின்னூட்டம் எழுதப்போய் அது கொஞ்சம் பெரிதாகிப்போனதில் பதிவாக்கியிருக்கிறேன்.
இது கட்டாயம் இலங்கைக்கு ஒரு பாடமாகவே இருக்கும். இலங்கையில் இத்தனை பிரச்சனைகளும் கெடுபிடிகளும் இருக்கையில் உயிர்கள் கிரிக்கெட் ஸ்கோர் போல எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கையில் விளையாடுவதற்கு சம்மதித்த இலங்கை அணிக்கும், எந்த வித மனிதநேயமும் இல்லாமல் புலிகள் மீதிருக்கிற நம்பிக்கையில் இலங்கைக்கு வந்து விளையாடிப்போன இந்திய அணிக்கும் (உண்மையில் பாகிஸ்தானுக்கு போகாமைக்கு மும்பை தாக்குதலுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல உள்ளுர இருந்த பயமும்தான் காரணம்) பாகிஸ்தானின் இந்தத்தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் அல்லது அவர்களுடைய இறையாண்மையிலும் மனச்சாட்சியிலும் சலனத்தை உண்டுபண்யிருக்கும்.
அதே நேரம் இலங்கை அணி இந்தியாவில் போய் விளையாடி இருக்கலாம். அதை செய்யாமல் மெத்தனத்தில் நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் சாப்பிடுகிறோம், குளிக்கிறோம் என்பது போல இதனையும் செய்து அத்தனை போட்டிகளிலும் மண்ணைக்கவ்விக் கொண்ட போதே புரிந்து கொள்ள வேண்டாமா இது காலத்தின் கட்டாயம் என்பதை!
இந்தியா புலிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இலங்கை பாகிஸ்தான் மீது வைத்தது இலங்கையின் முட்டான்தனமே ஒழிய பாகிஸ்தானுடைய குற்றமல்ல, அவர்கள் தாக்குவதென்று முடிவெடுத்துவிட்டால் இலங்கை கிரிக்கெட் அணி என்ன, எந்த நாட்டு ஜனாதிபதி வந்தால் என்ன, மறு கருத்தே கிடையாது அடிதான்!! பின்விளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அதனை எப்படி கையாளுவதென்பது அதற்கான பக்க வலு அவர்களிடம் இருக்கவே இருக்கிறது ஆனால் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் யாரிருக்கிறார்கள் உலகம் கண்டு கொள்ள விரும்பாத அடிமைகள்தானே அவர்கள்...
இதனை நான் கூறுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது இலங்கையின் உலகம் கவனிக்ககூடிய விசயங்களுள் இலங்கை கிரிக்கட் அணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகவே அவர்கள் ஆகக்குறைந்த மனித நேயத்தோடு அவர்களுடைய தொழிலை செய்திருக்கலாம் என்பதே! இலங்கையில் இவ்வளவு உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிறது நாளாந்தம் அரசியல் சட்ட யுத்த கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது எனவே நாங்கள் இந்த போட்டிகளை ரத்து செய்யலாம் என்று ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது உலக ஊடகங்களில் ஒரு சிறு சலனத்தையேனும் ஏற்படுத்தி இருக்கும் அல்லது இந்த காரணங்களை கூறி இந்தியாவில் விளையாடலாம் என்றாவது முடிவெடுத்திருக்கலாம். ஏனெனில் ஒருவன் தன்னை கொழுத்திக்கொண்டு சாவதை விட உலகம் பெரிய நட்சத்திரங்கள் சொல்வதையும் பணம் நிரம்பிய சமூகபெரிய மனித அந்தஸ்து உள்ளவர்கள் சொல்வதையும்தானே கவனிக்கிறது அதற்காகக்தான் சொன்னேன்!
செத்துப்போன முத்துக்குமாரிலிருந்து பலரும் சொன்ன "என் தமிழ் இனம் அழிகிறது அதனை காப்பாற்றுங்கள்" என்பதை விட "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்பது தானே பேசப்படுகிறது, உலகம் கொண்டாடுகிறது ஒவ்வொரு கேனையனும் ஊடகங்களும் சொல்லி சிலாகிக்கின்றன. இன்னொன்று ரஹ்மான் அதே மேடையில் இந்தியும் பேசியிருந்தார்.
ஆக இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தாக்குதல் தீவிர வாதம் என்பது என்ன விடுதலைப்போராட்டம் என்பது என்ன, என்பது தெரிய ஒரு வாய்ப்பாகவும் அது இந்தியா உட்பட உலகத்துக்கும் தெரிய ஒரு வாய்பாகவும் அமைந்த பாடம் என்பது என் கருத்து .
மற்றப்படடி தாக்குதலில் உயிர்நீத்த காவல் துறையினருக்கு அஞ்சலிகளையும், காயப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அக்கறையான விசாரிப்புகளையும், இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தானுக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Posted by King... at 2 comments
Labels: குருட்டு விவாதம்...
புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!
வலைப்பூக்கள் இவ்வளவு இலகுவானதாய் இருப்பதில் இருக்கிற அசௌகரியம் திரட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இணையச்செய்திகளை எடுத்துக்கொண்டு புழுகிறவர்கள் அதிகமாகிப்போனார்கள், தமிழ்மணத்தில் ஒரு பதிவு 10 நிமிடங்கள் முகப்பிலிருப்பதே பெரிய விசயமாகிவிட்டது! நல்ல எழுத்துகளை வாசிக்க முடியவில்லை நான் ஒரு வாசகன் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்பகிறேன்.
புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள் என்பது ஆரோக்கிமான விசயம். ஆனால் இணையத்தள செய்திகளை வெட்டி ஒட்டுவதிலும்; சில நகைச்சுவைகளை,அனுபவங்களை பகிர்வது ஆரோக்கியமானது என நான் நினைக்கிறேன். விருப்பட்டால் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என படங்கைளப்போட்டே தாங்களும் எழுதுகிறவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
உதாரணமாய் இன்றய தற்பொழுது தமிழ் மணத்தில் முகப்பிலிருக்கிற பிரதான இடுகைகளில் எத்தனை பதிவுகள் உருப்படியானவை என்று பார்ததால்...தமிழ் மணம் குப்பைகளை திரட்டுவது தெளிவு தமிழ்மணத்துக்கு வந்த சோதனை!
____________________________________________
கொழும்பின் விமானத்தாக்குதல் வெட்டி ஒட்டுகிறவர்களுக்கும் 'திடீர்' பதிவர்களுக்கும் அவரவர் வலையில் குப்பைகளை போடுவதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு செய்தி இவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை!இவர்கள் தங்கள் வலையில் குப்பைகளை சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை திரட்டிகளை நெருக்கடிக்கள்ளாக்கி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிற வீணான பரபரப்புகள்தான் வெறுப்பை தருகிறது.
எனக்கு இப்பொழுதிருக்கிற கோபம் சங்கடங்கள் மற்றும் சந்தியில் நின்று கதைப்பவர்கள் போன்றவர்களால் உருவாகுகிற வீணான பரபரப்புகள் மீதுதான்.எனக்கென்றால் விளங்கவில்லை திடீரென்று எங்கிருந்து எழுத வந்தார்கள் இவர்களென்பது,பிரச்சனையின் தார்ப்பரியம் தெரியாமல் உணர்ச்சிவசப்படுகிற விசயம் அல்லல இது.
பெரிய காமெடிகள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஊரில் பத்திரிகைகளுக்கு எழுதியவர்களாம், ஆக்கங்கள் எழுதி அனுப்பியவர்களாம், என்ன நேயர் விருப்பம் எழுதின ஆக்கள் எல்லாம் அரசியல் பேச வந்தால் இப்படித்தான் இருக்கும்,குடும்பச்சண்டைக்கே நேரம் போதவில்லை இவர்களுக்கு!!
நாட்டில் சமாதானம் தேவை என்பதும் யுத்தநிறுத்தம் அவசியம் என்றும் கதறுபவர்களாய் இவர்கள் இருக்கையில் இப்படியான அதே புரிதல்கள் இல்லாத சிங்களவர்கள் போல் புழுகுவது சகிக்க முடியாத ஒன்று .
சிங்களவர்கள் யுத்தத்தின் விளைவகளை நேரடியாக அனுபவிக்கவில்லை என்பதும் இந்த யுத்தத்தின் நீடிப்புக்கான இன்னொரு வலுவான காரணம் என்பதுதான் என் எண்ணம்.இரண்டு பக்கமும் யுத்தத்தை வலிகளோடு உணர்ந்திருப்பின் தலைமுறைகள் கடந்தும் இது நீடித்திரக்காது என்பது உண்மையாய் இருக்கலாம்.
நல்ல வாசிப்பகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுக்கக்கூடிய ஊடகமாய் வலையுலகம் இருப்பது உண்மை. அதற்கு திரட்டிகள் தருகிற பங்கும் அவசியமானதாகிற்று! அவை இப்படியான குழப்பங்களால் வீணாக்கப்பட்டுக்கொண்டிருப்பது தொடர் வாசகனாகிய என்னைப்போனறவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதும் உண்மை.
__________________________________________________
நீங்கள் எழுதுவதை நாலுபேர் வாசிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சமான புரிதலாவது உங்களுக்கு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எழுதுகிற விசயத்தில் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும் இல்லையேல் எழுதாமல் இருக்கலாம்! நாளுக்கு மூன்று பதிவு போட்டே அகவேண்டும் என்றிருப்பதை விட நான்கைந்து பதிவுகளை கூடுதலாய் வாசிப்பது நலம். அல்லது இருக்கவே இருக்கிறது பின்னூட்டங்கள் விரும்பிய அளவுக்கு எழுதலாம் இதன் மூலம் நன்றாக எழுதுவபர்களை ஊக்குவிக்கவும் முடியும்.
திருந்துங்கப்பா!!
____________________________________________________
எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.
Posted by King... at 11 comments
Labels: பதிவுலக குறிப்புகள்...