
யாரோ ஒரு முகம்தெரியாதவன் மரித்துப்போனது கேட்டும்
யாரையும் அறியாத பிஞ்சு முகங்களில் குருதி தெறித்தது பார்த்தும்
ஏதுமறியாத சனங்களென பொங்கியெழுந்த
புலம்பெயர்ந்த முகங்களும் அடங்கிப்போயின
காலத்துக்குமென்றிருந்த தலைவனும் கடைசியில்
யாருக்கும் தெரியாத கதைகளோடு கொலையுண்டுபோனான்
நானென்றும் நீயென்று வந்த புதிய தலைவர்களும்
சிறையென்றும் தனித்தென்றும் காணாமல் போயினர்.
மீதமிருந்த மீட்பர்களுக்கு நடுவே நடந்த போட்டியில்
பழைய கூத்தாடியே மாலை அணிந்தான்
இந்தா பிடி புதிய கதையென எல்லோரும் சொன்னார்கள்
இதுதான் கடைசியென்ற எல்லோரும் செத்துப்போனார்கள்
உண்மையைச்சொல்லப்போனால் எல்லா நான்களும்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.![]()
படங்களுக்கும் எழுதியிருக்கிற சொற்களுக்கும் நிச்சயமாய் தொடர்பிருக்கிறது. அக,புற தொன்ம, நவீன, பின்நவீன, இருத்தலிய என்று எந்த இழவை விரும்பினாலும் போட்டுப்பார்த்து என்ன தொடர்பு என்று கண்டறியவும. இருக்கப்படாமல் இன்று என்னுடைய இந்த பக்கத்துக்கு வந்த எனக்கு அடுத்த கட்ட பரபரப்புக்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது.
பக்ககுறிப்பு: குத்தி முறிக்காமல் சொன்னா கேளுங்கோ, ஒழுங்கா வேலையைப்பாருங்கோ.
Showing posts with label எல்லோரும் எழுதுவது.... Show all posts
Showing posts with label எல்லோரும் எழுதுவது.... Show all posts
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
Posted by
King...
at
1 comments
Labels: எல்லோரும் எழுதுவது...
சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!
திறக்கப்படாத ஜன்னலுக்கு வெளியே..
வீசிக்கொண்டிருந்த காற்றில் எழுதப்பட்டிருந்தன
சிறுபான்மையினருக்கான சாசனங்கள்...
இவை எந்த தேவதூதனால் முன்மொழியப்படும் என்பது
அடிமைகளாய் இருக்கிற என் சந்ததிகளுக்கு தெரிந்திருக்கவில்லை
எதிர்பார்க்காத நேரமொன்றில் அனுமதியின்றி நுழைந்த
தேவதூதன் வேடமிட்ட சாத்தான்கள் வாசித்துப்போயின
புதிய தலைமுறை அடிமைகளுக்கான சாசனங்களை
பயங்கரவாதம் முடிந்து போக,
அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன...
அடிமைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு!
Posted by
King...
at
2
comments
Labels: எல்லோரும் எழுதுவது...
Subscribe to:
Posts (Atom)

