சொல்ல விரும்பாதவை 28-10-2008

கருத்துச்சுதந்திரம் இருக்கிறது
என்னிடம் கணினி இருக்கிறது
இணைய வசதி இருக்கிறது
சமைத்துப்போட ஆள் இருக்கு அல்லது
சாப்பிட வசதி இருக்கு
தேவையென்றால் டாஸ்மாக் இருக்கு!
அவசியமென்றால் அவளை அழைக்கலாம்
பொழுது போகவில்லையென்றால் எழுதலாம்!
சிலருக்கதை புழுகலாம்...
ஆகவே...

திலீபனின் இறுதிநாள் நினைவுகள்...



தியாக தீபம் திலீபன் என்கிற பெயர் அவனுக்கு எத்துணை பொருந்திற்று...
அவன் தியாகத்தின் முழு உருவம்தான்...


திலீபனின் இறுதி நாள் நினைவுகள் இன்று. காந்திக்கு மஹாத்மா என்று கொண்டாடிய இந்திய தேசம் ஒரு தமிழ் இளைஞனின் உயிரை சொட்டுச் சொட்டாக பன்னிரண்டு நாட்கள் பருகி தங்களது அகிம்சை முகத்திரை கிழிந்து கொடூர முகத்தை வெளிக்காட்டி பன்னிரண்டாவது நாள் எது எப்படி இருந்தாலும் திலீபனின் தியாகமும் இந்தியாவின் துரோகமும் மறக்க இயலாத சில விடயங்களை இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் தந்திருப்பது உண்மை...
மறைந்து எத்தனை வருடங்களானாலும் நல்லுரின் வீதியில் மூட்டிய வேள்வித் தீயின் உணர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை என்பது உண்மை எவரொருவருக்கும் மாற்றுக் கருத்தில்லாமல் மனதார நேசிக்கிற ஒருவனாக திலீபன் இருந்தான், இருக்கிறான் என்பதும் உண்மை...
ஈழமும் போராட்டமும் பலவேறு திசைகளில் பயணப்பட்டு பல மாற்றங்களை சந்தித்திருந்தாலும் திலீபன் கேட்ட மாற்றங்களும் இன்னமும் நிகழவில்லை என்பதும் உண்மை...

யுத்தம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் நாடு நல்லா இருக்க வேண்டும்...

12ம் நாள்...


நன்றி :

யாழ் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கம் திலீபனின் 20 வது ஆண்டு நினைவு ஒலிக்கோப்பு...

(மறைந்த)தோழர் சில்க் ஸ்மிதா...!

பதிவின் தலைப்புக்கு தோழர் லக்கிலுக் காரணமாயிருக்கலாம் ஆனால் பதிவுக்கு அவர் காரணமல்ல...!

சில்க ஸ்மிதா இந்தப்பெயர் ( சிலுக்கு என்ற பெயர்தான்) தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அலை இன்னமும் ஓயவில்லை அது தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வயது வித்தியாசமின்றி ஏற்படுத்திய தாக்கங்களை நான் சொல்லி தெரியவேண்டும் என்பதற்கல்ல!
விஜயலட்சுமி என்கிற இயற்பெரில் சாதாரண குடும்பத்தில் ஆந்திராவில் பிறந்து தமிழ் நாட்டைக் கலக்கிய கவர்சிப் புயல் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி சென்னையில் அவருடைய அப்பார்டமென்டில் தற்கொலை செய்து கொணடதாக சொல்லப்படுகிற சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்பது மிகையல்ல.


அவரது எச்சில் பட்ட அப்பிளுக்கு தமிழ்நாடே காத்திருந்ததாக நான் குமுதம்,ஆனந்தவிகடன் களை வாசிக்கத்தொடங்கிய நாட்களின் ஆரம்பத்தில் படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு தோழர் சிலுக்கு தமிழ் சினிமா ரசிக நெஞ்சங்களில் குடியிருந்தார்.

அவர் பல மொழிகளில் பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் எனக்கு தெரிந்தவையும் குறிப்பிடத்தக்கவையும் என்றால் கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, ஸ்படிகம் இவைகள்தான்.

அவர் நடித்த படங்களை விட ஆடிய படங்கள்தான் அதிகம் என்பதுதான் உண்மை அவருக்கென்றே அமைத்தது போல நடனங்களும் அதற்கு அவர் கொடுக்கிற அசைவுகளும் அவருக்கே உரிய தனி ஸ்டைலில் இருக்கும். (பொன் மேனி உருகுதே) ஆனால் அவர் ஆடிய பாடல்களும் படங்களும் பல இருந்தாலும் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருகிற தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ( தமிழகம் மட்டுமல்ல) ரகசியமாய் ஒலிக்க விடப்பட்ட பாடல் நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடிதான்...கமலும் சிலுக்கும் கலந்தாடிய அசைவுகளில் அந்தக்காலத்து தமிழ் சினிமாவே அசைந்திருந்தது, தமிழ்நாடே அதிர்ந்திருந்தது,ரஜினியின் சிவாஜி படத்தில் கூட இந்தப்பாடலைத்தான் எடுத்துக்காட்டியிருப்பார் ஷங்கர்.

பலருடைய தூக்கத்தை பறித்த பாடல் இது...!
நேத்து ராத்திரி...

1979 இல் வண்டிச்சக்கரம் படம் மூலம் சிலுக்கு என்ற பெரில் தமிழ் நாட்டை மகிழ்வித்த கறுப்பு கவாச்சி நடிகை தோழர் சில்க் ஸ்மிதா கடைசியில் தமிழ் நாட்டிலேயே தனது உயிரையும் பிரிந்திருந்தர் அவருடைய மரணமும் மறைவும் பல சர்ச்சைகளை கொண்டிருந்தாலும் அவர் பல இதயங்களில் இடம் பிடித்திருந்தார் என்பதும் அவசரது ரசிகர்களை அவர் ஒரு நாளும் ஏமாற்றியதுமில்லை என்பதும் அவருக்கு இன்றும் இருக்கும் ரசிகர்களின் மூலம் நாம் கண்டுகொள்ளலாம் । நடிக்கும் பொழுதும் சரி மறைந்த பிறகும் சரி சர்ச்சைகளோடேயே இருந்த சிலுக்கு தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது .


எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க இயலாத ஒருவர் தோழர் சில்க் ஸ்மிதா...!

பி கு :

* தோழர் சிலுக்கு நடித்த 'தங்கத்தாமரை' என்கிற வெளிவராத படம்தான் அவர் கடைசியாக நடித்த படம் என்று சில தகவல்கள் சொல்கிறது அந்தப்படத்தின் இயக்குனரான திருப்பதிராஜா தோழர் சில்க் ஸ்மிதாவைப்பற்றி ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதினார் என்று ஒரு தகவலும் இருக்கிறது ஆனால் அது பற்றிய விபரம எனக்கு தெரியவில்லை...

* சும்மா ஒரு மாறுதலுக்காக சிலுக்கு!

திலீபனின் நான்காம் நாள்...

பல நாட்களாக இணையப்பக்கம் வர முடியவில்லை அதனால் பதிய வேண்டும் என்று நினைத்த பல விடயங்கள் பதியப்படாமல் இருக்கிறது.இருக்கிற சூழலில் இருக்கிற மிக நெருக்கமான விடயம் இணையம் மட்டுமாகத்தான் இருந்தது அதற்கும் தற்பொழுது சிக்கல வந்திருக்கிறது.

புரட்டாதி 15ம் திகதி தியாகி திலீபனின் நினைவு நாட்கள் ஆரம்பமாகியிருக்கிறது வடக்கிலங்கை தற்பொழுது இருக்கிற நிலையில் அதனை நினைவு கூர்கிற நிகழ்வுகள் எந்தளவு இருக்கிறதென்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னிடம் அவன் நினைவுகளை அழிக்க முடியவில்லை...

ஒரு போராளி என்பதிலும் அவன் இயல்புகள் வகையாகத்தான் என் மனதுக்கு அவன் நெருக்கமாயிருக்கிறான்.நிறைய பதிந்து போயின அவனுடைய நாட்களின் நினைவுகளும் அவற்றை நான் சிறுவயதில் நினைவு கூர்ந்த நிகழ்வுகளும்...

எப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் துளிகளை வரவழைத்து விடுகிற காட்சிகள் அவன் உண்ணாவிரதம் இருந்த காட்சிகளும் அதன் நினைவுகளும்...


ஈழத்தின் அனைவர் மனதிலும் அவனுக்கென்று தனி இடம் இருந்தாலும் என் மனதில் அவனுக்கு முதலிடம் இருந்தது ஈழ வரலாற்றில் எனக்குள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது இவன் மட்டும்தான்...

உயிரை சொட்டுச்சொட்டாய் விட்ட வீரன், உண்மை மாவீரன் அவன்! அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த கொள்கைப்பிடிப்பும் மன உறுதியும் தியாகமும் சாமானியர்களால் முடியாத காரியம்.

ஈழ வரலாற்றில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் என்றும் என் மனதில் மாறாத இடத்தில் இருப்பது திலீபன்தான் அர்த்தமுள்ள போராளி அவன்! அவனுடைய காலத்தில் அந்த போராட்டத்துக்கு அவசியமும் அர்த்தமும் இருந்தது;

இப்பொழுது...

http://www.youtube.com/watch?v=QvjaJk81ZC8&feature=related

பார்க்க விரும்பாத படங்கள்...!

ஜப்பானின் படங்களை பதிவாக்கிய அடுத்த நாளே இந்தப்படங்களை பதிவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்பொழுதிலிருந்த மனோ நிலையில் பதிவாக்கத்தோன்றவில்லை. கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது படங்களை பல தளங்களில் இருந்து தரவிறக்கி வைத்திருந்தேன்,இன்று அவற்றை சிலருக்கு மின்னஞ்சலும் செய்திருக்கிறேன்.

அப்பொழுதுதான் பதிவாக்கலாம் என்கிற எண்ணத்தையும் செயல் படுத்தலாம் என்று தோன்றியது.

படங்களை பார்க்கும் பொழுது தோன்றிய என் பல விதமான சிந்தனைகளையும் குறிப்புகளாக எழுதினாலே அது ஒரு புத்தகம் அளவுக்கு நீளும் என்பதால் படங்கள் மட்டும்

வன்னியில் எடுக்கப்பட்ட படங்கள்.தற்பொழுது நிலமை மேலும் கவலைக்கிடம்.










































போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!

பின்குறிப்பு அல்லது குமுறல்:

1)"மச்சான் லங்காவே ஜெயசூரியா நத்தங் பா மச்சான்"

2)"நாங்கள் ஐடியா கப்பும் பாத்தம்...மென்டிஸ் சுப்பர் போலிங் மச்சான்"

3)நான் இருக்கிற இடத்தில் எனக்கு இணையம் பயன் படுத்தக்கூடிய வசதி கிடைத்திருப்பதனாலலும் என்னிடம் வாசிக்கிற பழக்கம் இருப்பதனால் நான் சில நாட்களில்; தேவையான அல்லது குறிப்புகள் எடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அவற்றை பிரதி எடுத்து சென்று அறையில் வைத்து படிப்பது வழக்கம் என்பதனாலும் என்னிடம் தம்பி நாட்டு நிலமைகள் எப்படி என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற பதில் "அண்ணன் நான் அதுகள் பாக்கிறல்லை அண்ணன்"

சொல்ல விரும்பாதவை - 12.08.08

ஒரே பேரூந்தில் பிரயாணம் செய்கிறோம்

ஒரே அலுவலகங்களில் பணி செய்கிறோம்

ஒரே பல்கலைக்கழகங்களில் படிக்கிறோம்

கடிதப்போக்கு வரத்து இருக்கிறது

மின்னஞ்சல் பரிமாற்றங்களும் உண்டு

தொலை பேசி வசதிகள் இருக்கிறது

பணம் கொடுத்து வாங்கப்படுகிறது

கடைகளில் உட்காந்து சாப்பிட முடிகிறது

கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்

எல்லாமும் நடக்கிறது

ஆள்கடத்தல்,குண்டு வெடிப்பு

காணாமல் போதல், தாக்குதல்கள்

இடப்பெயர்வு இவைகளோடு!

சொல்ல விரும்பாதவை - 10.08.08

கொம்பனித்தெருவை

சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்

பத்து ரூபாவைக்காட்டி பிச்சைக்காரார்களை

அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்

சொறி நாய்களை பிடித்து அடைத்திருக்கிறார்கள்

சார்க் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்கள்..

கோவணத்ததை கழுவி

கொடியா ஏத்தினாலும்

கோவணம் கோவணம்தானே...

கும்பிடுவதற்கு விரும்பினால்

தொணடர்கள் கிடைக்கலாம்

நம்புவதற்கு...

பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!

பதிவின் தலைப்பு மதிப்புக்குரிய இலங்கையின் மக்களுக்கு உரியது அதனால மற்றவர்கள் குறை கொள்ள வேண்டாம்...

எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள்தான் ஆனால் என்ன செய்ய என்ரை வயித்தெரிச்சலைக் கிளப்புற 'மெயில்' அனுப்புறதில அவங்களுக்கும் ஒரு சந்தோசம்...!அனுப்பட்டும் அந்த வயித்தெரிச்சைல உங்களோடையும் பகிர்ந்து கொண்டு "பெருமைப்படுகிறேன்"!

ஜெப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி எல்லோரும் கேள்விப்பட்ட இடங்கள்தான் ஆனா அது அணுகுண்டு போட்டு அழிஞ்ச இடமெண்டுற வகையிலையாத்தான் இருக்கும். அந்த இடங்கள் இப்ப எப்படி இருக்ககெண்டு எங்கடை இலங்கையின்ரை **ராண்டிகளுக்கு தெரியவேண்டாமே அதனாலதான் இந்த மெயில ஆளாளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள்...

இலங்கையின்ர பெருமை பேசுற 'மெயில்களும்' திரியுது அது எப்படியான மெயிலுகள் எண்டு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேணும் எண்டுறதில்லை...

பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!!!???




























We all know that Hiroshima and Nagasaki were destroyed in August 1945 after explosion of Nuclear bomb.
However little we know about progress the people of that land made during the past 62years.
Here are some photos.

THE COLOURFUL CITY...!


பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...

இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும்...!

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டது...இருந்தும் எந்த மாற்றமும் இல்லை இலங்கையில்,இன்னும் சிக்கல்கள் அதிகமாயிருக்கிறதொழிய மாற்றம் எதுவும் ஆக்க பூர்வமாக இல்லை. கலவரமாக இல்லையே ஒழிய இன அழிப்பும் உயிரழிப்பும் நடந்து கொண்டே இருக்கிறது...!
இருபத்தைந்து ஆண்டுகளின் பிறகும் சந்ததிகளின் சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம்...! என்னதான் உலகமும் அறிவும் வளர்ச்சி அடைந்தாலும் இலங்கை மஹா ஜனங்களின் சிந்தனை வளர்ச்சி அந்த அளவில்தான் இருக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த இளைய சமூகம்! எதுவும் விளங்காமல் இருக்கிறதா அல்லது, எமக்கென்ன என்கிற போக்கில் போய்க்கொண்டிருக்கிறதா?! இறப்பும் இழப்பும் சுயத்துக்கு நிகழும் பொழுதில்தான் பாதிப்பை உணருமா?! அல்லது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தில் இருக்கிறதா?!எனக்கென்றால் எதுவுமே புரியவில்லை...!


எழுக இளைய சமுதாயமே புதிதாய் பிறந்த நாம் இன்னும் அதே பழைய கேவலங்களிலேயே உழலுவதா படித்த பகுத்தறியும் திறண்படைத்த உனக்கு இலங்கையின் இந்த நிலமை அரசியலின் தந்திரம் என்பது இன்னமும் புரியவில்லையா...?

பழைய கதைகளைப்பேசி நாட்டை கூறுபோடுகிற பிணந்தின்னிகளின்கையில் இன்னமும் நம் நாடு இருக்க வேண்டுமா...?

வேண்டாம் இந்த யுத்தம் நம்மிடம் மனிதம் இருக்கிறது அறிவும் ஆற்றலும் சிந்தனை திறணும் படைப்பாற்றலும் இருக்கிறது..

எழுவோம் இந்த நாட்டின் பொருளாதார அரசியலை மீளக்கட்டமைப்போம்

அன்பும் நட்பும் மட்டுமே பாராட்டுகிற புதமியதொரு சமூகம் படைப்போம்


கலவரங்கள் நினைவு கூர்வது ஏதாவதொரு மாற்றம் நிகழ்வதற்காகவே...

இருபத்தைந்து வருடங்கள் போதாதா இலங்கை ஜனங்களே உங்களுக்கு
நாம் இன்னமும் கறுப்பு பகல்களுக்கேள்தான் இருக்கிறோம் என்பதை கண்டறிய...

வேண்டாம் என்னருமை சகோதரர்களே...
இனியும் பொறுக்காதிருப்போம் நாட்டை யுத்தமும், அரசியலும், பழிதீர்க்கும் வெறியும் பாழ்படுத்துவதை...

இலங்கையின் வரலாற்றின் கறுப்பு பக்கங்களை மறப்போம் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவோம்!


http://padamkadal.blogspot.com/2008/07/1983.html

(யூலைக்கலவரம் தொடர்பான டி. ஜே அண்ணனின் பதிவு...)


பிரிய தர்ஷினியும் குருவியும்...

பிரிய தர்ஷினியும் குருவியும்... இவளை என்னவென்று சொல்ல...

"இந்த காலத்து இளைஞர்கள் என்ன மாதிரி சமுக சிந்தனையோட நாட்டுக்காக செயல்படணுங்கிற உயர்ந்த கருத்தோட குடும்பத்தையும் தகப்பனையும் காப்பாற்றுதல், நாட்டை சமூக துரோகிகளிடம இருந்து காப்பாற்றுதல், காதலியை காப்பாற்றி குடும்பத்தோடு சேருதல்ங்கிற முப்பரிமாண கதாபாத்திரத்தில விஜய் சிறப்பாக நடடிச்சிருக்கிற படம்தான் குருவி" இந்த கருத்தை நான் சொன்னதுன்னு தப்பா எடுத்துக்காதிங்க,இது நம்ம கலைஞர் ரிவி படவரிசை படத்துல பிரிய தர்ஷினி சொன்னது...

பிரிய தர்ஷினிக்காக சில நேரங்களில் நான் பார்க்கிற நிகழ்ச்சிகளில் கலைஞர் ரிவி படவரிசை பத்தும் ஒன்று. நேற்று எதேச்சையாக "நைட் டியுட்டி" முடிஞ்சு அறைக்கு வந்து ரிவியை போட்டால் நிகழ்ச்சி போய்கொண்டிருக்கு வேலை முடிந்து வந்து செய்கிற வழைமையான காரியங்களை கவனித்துக்கொண்டே பிரிய தர்ஷனியை... மன்னிச்சுங்குங்க நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன், அப்ப இரண்டாவது இடத்துல இருக்கிறது நம்ம குருவி படமென்று ஏற்கனவே தெரிஞ்சாலும் அதுக்கு பிரிய தர்ஷனி சொன்ன கருத்து இருக்கே நான் அப்படியே கடகடகன்னு சிரிச்சசிட்டேன். அந்தப்பொண்ணு வார்தைகனைள நல்லா உச்சரிக்கும்றதுக்காக எதை வேணும்னாலும் எழுதிக் கொடுத்திடுவிங்களா மக்காள்; என்னைய இப்படி சிந்திக்க வச்சிட்டிங்களே? அது என்னண்ணே முப்பரிமாண கதாபாத்திரம்? அப்ப தசாவதாரம் எத்தைனை பரிமாணம்ணே... சரி சிரிச்சதுல என்ன தப்புங்கறிங்களா நல்ல வேளை நான் மட்டும்தான் அறையில இருந்தேன் அறை நண்பன் இருந்திருந்தான்னா என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்திருப்பான் வீட்டுக்கு பண்ணி சொன்னாலும் சொல்லியிருப்பான் ஏனெண்டா சமீப காலமா தமிழ் மணம் தவிர வேற காரியமே கிடையாது எனக்கு,அதில்லை அப்படின்னா நேரங்களில்றூமிலதான் இருப்பேன் றூமில இருக்கிறப்போ... றூம்மேட்ஸ் கலைஞர் ரிவிதான் அதிலையும் வைர செஞ்சம் நம்ம குடும்பம்னு போட்டு என்னோட பிறசரை கூட்டுறதுல என்ன சந்தோசமோ தெரியலை இந்த சீரியல் காரங்களுக்கு, கலைஞர் ரிவியை போட்டு பாக்கிற நிகழ்ச்சிகளை பாத்தால் கொலைவெறிதான் வரும் திட்டிதீர்த்திடுவேன்,சில என்னையும் அறியாமல் சிரிப்பு வந்திடும் இதைப்பாத்த்து பாத்து அவங்கள் எனக்கு ஏதோ நடந்திடிச்சு என்று நினைச்சதுல தப்பில்லைதானே......அடிக்கடி எனக்கும் அறை நண்பர்களுக்கும் சண்டையெல்லாம் கூட வந்திருக்கு பின்ன தாங்க முடியாம நான் ரிவி பண்ணினா சும்மா இருப்பாங்களா ஆனா அதுவும ஒரு சுவாரஸ்யமான தருணங்கள்தான்...

இதை விட கொடுமை என்னன்னு கேட்டிங்கன்னா!

தங்கச்சி வந்து அக்காவை நல்லா இருக்க விட மாட்டேன்னு பொருமுறதும், அக்கா வந்து நான் மாமனார் பேருல வியாபாரம் தொடங்கறேன் நீங்கல்லாம் ஆதரவு தருவிங்கன்னு நம்புறோம்னு நம்ம தலையில மிளாகாய் அரைக்கப் போறோம்னுறதை வேற மாதிரி சொல்லுறதும் என்ன கொடுமையப்பா இது தமிழ் நாடே இப்படித்தான் இருக்கா அல்லது???? இந்த ஸீரியல் பாக்கிற பெண்களுடைய மனநிலை எப்படி இருக்குங்கிறத வச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணினா நல்லா இருக்ம்னு நினைக்கிறேன்(வெள்ளைக்காரன் எது எதுக்கோல்லாம் ஆராய்ச்சி பண்ணும்போது...)அதுக்கப்புறம் மெகா ஸீரியலை தடைசெஞ்சாலும் செஞ்சுருவாங்க பின்ன என்னங்க நல்லவங்க எப்பவுமே சோப்பிணாங்கி மாதிரி அழுதுகிட்டே இருப்பாங்களாம் கெட்டவங்க செய்யுறதெல்லாம் செய்து சந்தோசமா வாந்துட்டு வாழந்து முடியுற நாட்களில வந்து (அப்புறம் சீரியல் முடிய அவ்வளவு நாள் ஆகாதா) மன்னிப்பு கேட்க நல்லவுங்க பெருந்தன்மையா மன்னிச்சுருவாங்களாம் அப்படின்னா நல்லவங்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா...?

அது மட்டுமில்லை இப்பல்லாம் பழைய படங்கள்ள இருந்து எடுத்து அங்கங்க சிச்சுவேசன் சாங் போடுறாங்கப்பா சீரியல்ல அதை விடுங்கோ பரவாயில்லை.. கடைசியா என் கண்ணுல பட்ட சீரியல் எபிஸோட்டோட முடிவில சொத்தெல்லாம் எழுதிக்கொடுத்துட்டு பிரிஞ்சு போய் வியாபாரம் பண்ண இருக்ககிற அக்கா வோட பாங்க் லோனை தடுக்கிறதுக்காக பாங்க் போய் குழப்பிட்டு வந்து அவளை நடு ரோட்டுல கஷ்டப்பட வைக்கணும்னு சொல்லுவா அந்த ஸீனோட தொடரும் போடுவாங்கன்னு பாத்தா தங்கச்சியோட முகத்தை திரையில விட்டுட்டு...
இவளை என்னவென்று சொல்ல ...?

அப்படின்னு முடிப்பாரு டைரைக்டர் சிகாமணி, அடப்பாவிகளா பிழைப்புக்காக இந்த மாதிரி சீரியல் எடுக்கிற

உங்களை என்னவென்று சொல்ல...?

ஒரு கிலோ அரிசி 130 ரூபா, சடலங்கள் மீட்பு...

யாழ்ப்பாணத்துல இருக்கிற பிள்ளையளுக்கு சாப்பிட வழியில்லை படிக்கவும் வழியல்லை இருந்தாலும் எங்கடை பிள்ளையள் படிப்பை கைவிடுறதில்லை எண்டுறதிலை எனக்கு தனிப்பட்ட பெருமை இருக்கு விளக்கு கொழுத்து மண்ணெண்ணை இல்லையெண்டாலும் படிச்சு கம்பஸ் போற பிள்ளையள் எங்கடை பிள்ளையள் ஆனா இண்டைக்கு இருக்கிற நிலமையைப்பாத்தா பயமாயிருக்கு நாட்டில சனமில்லை இருக்கிற சனத்துக்கு வாழ வழியில்லை! என்ன செய்யுறது...பின்ன என்னத்தை நான் சொல்ல ஒரு கிலோ அரிசி 130 ரூபா எண்டால் மற்ற தேவையான சாமான்களின்ரை விலையை கேக்க வேணுமோ...?விலைவாசியை கவனிக்கிறதுக்கெண்டு இருக்கிற ஆக்களும் ஒருத்தரும் கடைமையில இல்லையாம் பாவம் அவையளுக்கு எத்தினை கஷ்டமோ? கப்பல்ல வாற கொஞ்ச சாமான்கள் தான் எல்லா தேவைக்கும் எண்டால் என்ன செய்யுறது யாழ்ப்பாணம்??? ஆரோ சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தல இருக்கிற சனம் எல்லாம் மன உளைச்சலால பாதிக்கப்பட்டிருக்காம் பொறுத்துக்கொள்ளுங்கோ தாகம் தீரேக்க இருக்கிற மிச்சம் சொச்சம் சனமும் என்னநிலமைக்கு வந்துடுமோ ஆருக்கு தெரியும்...!?


***
அவைத்தலைவராம் அது யாரை அவைத்தலைவர் எண்டு சொல்லுறதெண்டு எனக்கு தெரியாது ஆனா அவற்றை பெயர் நிமால் சிறீ பால டி சில்வா எண்டு சொல்லிச்சினை அவரென்ன சொல்லியிருக்கிறார் எண்டால் இலங்கையில மட்டுமில்லையாம் உலகம் முழுக்க இதுதானாம் நடக்குதெண்டு உலகம் முழுக்க உதே நடக்குகுது நான் தெரியமத்தான் கேக்குறன் எந்த ஊரிலை நடக்குது இந்த மாதிரி கேவலமான பொருளாதாரத்தோட தேவையில்லாத ஒரு பிரச்சனை...

***
நாட்டில சாப்பிட வழியில்லை, நிம்மதியா இருக்க வழியில்லை இந்த கேட்டுக்குள்ள அவையின்ர தரப்பில இந்தனைபேர் பலி, இவையின்ர தரப்பில இத்தனைபேர் பலி, பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்று, காவலரண்கள் சேதப்படத்தப்பட்டது, எண்டு பெருமையான செய்திகள் வேறை-அதுக்கு மாறி மாறி மறுப்பறிக்கைளும் என்ன கொடுமையப்பா இது!. போதாக்குறைக்கு அந்த பஸ்ஸில குண்டு வெடிப்பு, இந்த கடையில குண்டு வெடிப்பு, அந்த இடத்தில குண்டுத்தாக்குதல், இந்த இடத்தில இத்தனைபேர் பலி எண்டும் அதுக்கு போட்டியா இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலைகளும், ஆள் கடத்தல்களும், சடலங்கள் மீட்பும் எண்டு எந்தப்பத்திரிகையை பாத்தாலும் நாட்டின்ரை பெருமை சொல்கிற செய்திகள் தானே வருகுது மற்ற நாடுகளைப்போல; இதிலை விலைவாசி கூடினா நாட்டுக்கொண்டும் குறையப்போறல்லை தானே...?

நான் தசாவதாரத்தை எழுதப்போதில்லை...

தசாவதாரம் தசாவதாரம் தசாவதாரம் எங்கு பார்த்தாலும் தசாவதாரம் முறையாக படத்தை பாத்தவங்க எழுதினாலும் பரவாயில்லை சும்மா ஒரு தகவல் சொல்கிற பதிவு போட்டவங்க கூட தசாவதாரத்தோட சம்பந்தப்படுத்தி தலைப்பு வச்சு போட்டிருக்கினம்.படம் பார்த்தவர்கள், பார்க்காதவார்கள், படம் பார்க்கப்போய் பாக்க முடியாமல் வந்தவர்கள்,படம் பார்த்து நொந்தவர்கள் என்று பலதரப்பட்ட திறமை சாலிகளும் பதிவு போட்டிருந்தினம்.பதிவுகளை படிச்சதிலயே படத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது படம் பாக்கப் பாக்க பதிவுகளின்ரை தலைப்புகள் வந்து பயமறுத்திக்கொண்டே இருந்தது கடைசியில கிடைச்ச மட்டமான குறுந்தகடும் விமர்சனங்களும் சேர்ந்து படத்தை பைத்தியக்காரனின் தசாவதாரம் பதிவின் தலைப்பு மாதிரி ஆக்கிவிட்டது. http://naayakan.blogspot.com/2008/06/blog-post.htm(பதிவுக்கான தொடுப்பு இது)

ஒரு படம் எடுத்திருக்கினம் அதுக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் குடுத்திட்டினம் அது சரி அதுக்காக அதை கிழிச்சு தொங்கவிட்டா எப்படி...சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா ...

"இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாய்க்கிப்புட்டாய்ங்கடா" எண்டு வடிவேலு சொல்லுறது மாதிரி உலக நாயகன் உலகத்தரம் என்று சொல்லிச் சொல்லியே படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியதும் இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாகலாம்... தேவயில்லாதது பத்து வேடங்கள் அவசியமற்ற பாத்திரப்படைப்புகள் என்று கமல் இந்தப்படத்தில் தன் சுயத்தை இழந்திருப்பது தெரிகிறது...

மற்ற படி இந்த வைணவர் - சைவர் கமல்; கடவுள் இருக்கிறாரென்கிறாரா இல்லையென்கிறாரா அல்லது கடவுள் வேணுமென்கிறாரா என்கிற நுண்ணரசியலெல்லாம் எனக்கு தெரியாதப்பா...

கமல் நல்ல கலைஞன் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது...நல்ல உடல் மொழியும் இயல்பான நடிப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது..ஆனால் தசாவதாரம் போன்ற படங்களை விட சாதாரணமான உணர்வுகளை சொல்கிற படங்களில் அவரால் நிறைய ஜொலிக்க முடியும் என்பது என்கருத்து...

இது என்ன கரைச்சலப்பா தசாவதாரத்தை எழுதப்போவதில்லை எண்டு சொல்லிப்போட்டு அதைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறியள் எண்ட சலிப்புகளுக்கு முன்னால் கமலை நான் ரசித்த ஒரு படத்திலிருந்து...ஒரு காட்சியோடு பதிவை நிறைவுசெய்கிறேன்...

http://www.youtube.com/watch?v=6c_y0_fSPp0

படத்தின் காடசியை பதிவிலேயே காடசிப்படுத்தினால் சுவாரஸ்யம் இருக்காது அதனால் பதிவுக்கான தொடுப்பு மட்டும் கொடுத்திருக்கிறேன் (பொறுமை பொறுமை) பாத்துக்குங்க..

பின்குறிப்பு: நான் இன்னமும் படம் பார்க்கவில்லை...

சிறப்பு உறுப்பினர் பாலகுமாரனும் நானும்...

முதல்ல என்ரை கண்ணுல பட்ட ஒரு செய்தி ....

விகாரமாதேவி கருவுற்றிருந்த போதும் தமிழின அழிப்பு வெறி இருந்தது: க.வே.பாலகுமாரன்
[புதன்கிழமை, 28 மே 2008, 03:21 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
முறிகண்டியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட மக்களின் வணக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2500 ஆண்டு காலமாக குருதி குடிக்கும் வெறியில் தமிழினத்தை சிங்களம் படுகொலை செய்கின்றது.
தமிழினத்தை அழிக்கும் வெறி சிங்கள மக்களிடம் உறைந்து போய் உள்ளது. துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் தமிழனின் பச்சைக்குருதியை குடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்று அவர்களின் இதிகாசம் சொல்கின்றது.
தேசத்தின் இருப்பில் இந்தப் படுகொலைச் செய்தி இடிக்கு மேல் இடியாக வந்து சேர்ந்தது. பாரதிபுரத்திலும் மலையாளபுரத்திலும் காற்று ஆடவில்லை.
தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் வேர்களில் காலம் காலமாக உள்ளது. பெரும் புயல் காற்றில் விளக்குச்சுடர் அசைகின்ற மாதிரி நாம் அசைகின்றோம்.
இத்துயரத்தை அழுது கொட்டிய பின்னர் இந்தப் பெற்றோரை, உறவுகளை, இழந்தவர்கள் நாளைக்கு ஒளியாக மாறி பின் பொறியாக மாறுவார்கள். அவர்கள் தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உதவுவார்கள்.
இந்த பசுந்தளிர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து சிங்கள அரசிற்கு தக்க பாடம் புகட்டவேண்டியது நமது கடமை என்றார்.

இப்ப நான் புலம்பின கதையள்...


என்ன 2500 வருசத்துக்கு மந்தியோ என்ன கொடுமையப்பா இது நான் 30 வருசத்துக்கு முந்தின கதையே வேண்டாம் எண்டு சொல்லுறன் இது என்னடாண்டால் 2500 வருசத்துக்கு முதலே இருந்ததாம்.. கொடுமையடா சாமி...

நாங்களும்தானே அங்கங்க குண்டுவச்சு பீதியைக்கிளப்புறம்; அதுக்கென்ன சொல்லுறியள் அடிக்க வராதையுங்கோ ஐயா நான் சின்னப்பெடியன் உண்மையா எனக்கு நல்ல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள் என்ரை நண்பர்களுக்கு ஒரு கவலையெண்டால் அது எனக்கும்தானே நீங்களே சொல்லுங்கோ உங்கடை ஆக்களுக்கு ஒரு கவலை எண்டால் அது உங்களையும் கஸ்டபபடுத்தும்தானே... நல்ல சந்தோசமான வாழ்க்கை வாழத்தானே அழுது கொண்டு பிறக்கிறம்...

தேவையில்லாம நாட்டுக்குள்ள நடக்கிற பதிலுக்கு பதில் பிரச்சனைகளால நல்லதொரு இளைய சமுதாயம் நாசமாப்போகுது மஹிந்தவும் சொல்லுக்கேக்க மாட்டார் அந்தப்பக்ம் இருக்கிற ஆக்களும் அப்பிடித்தான் அதாலை நீங்கள் ஆரையாவது இல்லாமப்பண்ணோணும் எண்டால் யுத்தத்தையும் உந்த கேவலமான அரசியல்வாதிகளையும் இல்லாமப்பண்ணுங்கோ அதுக்கு நானும் வாறன்....

ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு 2000 ம் ஆண்டு பிறந்த எந்தக்குழந்தைக்கு தெரியும் யுத்தமும் இனப்பிரச்சனையும் அதுகளுக்கெல்லாம் ஏனிந்த கொடுமை...

பேசுறதுக்கு ஒரு மேடைகிடைச்சாப்போதுமே உப்பிடித்தான் நடேசண்ணனும் கடுகு சஞ்சிகை வெளியீட்டுல பேசினார் அவர் பேசினதுலயும் உப்பிடித்தான் பெடியளுக்கு படிப்பு வேணும் கல்வி வசதிகள் வேணும் அப்படி இப்படி என எல்லாம் சொன்னார் ஆனால் அதுக்கான சூழலைப்பற்றி ஒண்டும் சொல்லையில்லை வன்னிக்க இருக்குற பெடியளுக்க படிக்க மனம் வருமே நீங்களே சொல்லுங்கோ படிக்கிற பெடியளுக்கு "படி" எண்டு கூட தேவையில்லாம சொல்லக்கூடாதாம் ஆனா பெடியள் படிக்குதுகளோ இல்லையோ அதுகளுக்கு கட்டாயம் துவக்குப்பிடிக்கதெரிய வேணும், அது, இது எண்டு பல பிரச்சனைகள் பிள்ளை எப்படிப்படிக்கும்...

பழைய கதையளை பேசாதையுங்கோ அண்ணன்...

2500 வருசத்துக்கு முன்னமே அழிக்க நினைச்சால் இந்தளவுக்கு அழிஞ்சிருக்கோணும் அந்த அந்த பழைய கதைகளெல்லாம எதுக்கு ஐயா எங்களுக்கு நாங்க இப்பத்தான் பிறந்திருக்கோம் இன்னும் எவ்வளவு நாளைக்கு வாழ்வோம் சொல்ல முடியாதே ... அதனால விட்டுடுங்க வாழ்ந்துட்டுப்போறோம்

இது நான் மட்டும் சொல்லுற கதையில்ல நிறைய சகோதர மொழி நண்பர்களும் இதைத்தான் சொல்லுகினம். இளைய சமுதாயம் புரிந்துணர்வோடு இருக்கிறது சோத்துக்கும் பணத்துக்கும் கும்பிடு போடுற சில மோடையர் கூட்டம்தான் யுத்தத்தை தூண்டுகிறது மக்கள் துணிந்துவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்...


நீங்கள் இப்பிடிச்சொல்லுறியள் வன்னிக்கை இருக்கிற சனம் என்ன சொல்லுதண்ணன் மிச்சமிருக்கிற வாழ்க்கையை என்ன செய்யுறதெண்டு யோசிக்குது அப்பிடித்தானே...

கொஞ்சம் பொறுங்கோ அடுத்த பதிவில எங்கடை மஹிந்த மாத்தையா என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் அது இதைவிட பெரிய கொடுமையா இருக்கும் போல...

ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கவின் பதில்களும் என்னுடைய புலம்பல்களும்...

ஒரு இணையத்தளத்தினை கடந்து செல்கையில் என் கண்களுக்கு தட்டுப்பட்ட பிரதமரின் பதில்களும் என் சிற்றறிவுக்கு வந்த சிந்தனைகளும் (பதிவு போடுவதற்கு ஒரு சாட்டு) ஏதாவது எழுதவேணும்தானே எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் கிடையாது சின்ன வயதிலிருந்தே அரசியல் என்றால் அது ஒரு திருகுதாளம் பண்ணுகிற தொழில் என்றுதான் கருத்து இருந்து கொண்டிருக்கிறது எனக்கு:)

போடுவதே உப்புச்சப்பில்லாத பதிவு அதில என்னுடைய சுயபுராணம் வேறை தேவையோ அதனால கனக்க அலட்டாம பதிய வந்த விசயத்தை பதிஞ்சு போட்டு போறன் படிக்க முடிஞ்சா படியுங்கோ...

சிறிலங்கா அரசின் ஊடகமான ஏரிக்கரை பத்திரிகையின் வாரப் பதிப்புக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

"தமிழீழத்தை ஆதரித்து தனது பிரச்சினைகளை இந்தியா அதிகரித்துக்கொள்ளாது:
சிறிலங்கா நம்பிக்கை தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய் தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்
"

என்ன இந்தியா இதைக்கேட்டியோ நீ நல்ல கதைதான் பாத்தியோ! அதுவும் சரிதான் உனக்கே எத்தனை பிரச்சனை இருக்கு நீயே தமிழ் மக்களெண்டால் அது ராஜீவைச்சுட்டாக்கள் எண்டுதானே நினைச்சுக்கொண்டிருக்கிறாய் உனக்கின்னும் அந்த விசயமே தெளிவாகையில்லை.

முன்னர் ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த வரதராஜப்பெருமாள் போன்று பிள்ளையானும் இந்தியாவினால்தான் இயக்கப்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு;

"மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வர் என்று அவர் பதிலளித்திருக்கிறார்"

பிள்ளையான் ஆரோட இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவர் என்ன செய்யப்போறார் எணடுறதுதானே இப்ப சனத்தின்ரை கேள்வியெல்லாம்...
(முதல் அவர் பதவியில இருக்கோணும் இருந்தாலும் உயிரோட இருக்கோணுமே)

"கருணா நாடு திரும்பிய பின்னர் பிள்ளையான் தலைமையிலான குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு;

"அது பிள்ளையான் குழுவைப் பொறுத்தது। அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்."


அப்ப கருணாம்மானுக்கு ஒரு தனி இடம் அரசாங்கத்தில இருக்கெண்டுறது வெட்ட வெளிச்சம்...

வட போர்முனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்;

"முதல் முறையாக விடுதலைப் புலிகள் வன்னியில் நான்கு போர் முனைகளால் முன்னேறும் அரச படையினரை எதிர்கொண்டுள்ளனர்.
90 ஆயிரம் படையினரின் இந்த முற்றுகையின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சிறிது சிறிதாக அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. சண்டையிடுவதற்கு ஒருவருமே எஞ்சியிராத நிலை வெகு விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்"


என்ன நடக்குது வடக்கில இனி என்ன நடக்கப்போகுது? சண்டைபிடிக்கிறது ஆளில்லாமல் போகலாம் சரி அது வேறை விசயம் வடக்கில இருக்கிறதுக்கு ஆக்களிருப்பினம் தானே...

அமைதிப் பேச்சுக்கள் குறித்து கேட்டபோது;
"விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற கதைக்கே இனி இடமில்லை. இது விடயத்தில் எந்த புறச்சக்திகளின் கட்டளைக்கும் அரசு அடிபணியாது"


அப்ப ஒரு முடிவுக்கு வந்துதான் நிப்பாட்டுவினைபோல...

"வெளிநாடுகள் எமக்கு நண்பர்களாக இருக்கும் வரை அவர்களின் பங்கு, பணி பாராட்டப்படும் எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை அவர்களுக்கு கிடையாது அந்த வகையில் விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தை செய்து கொள்ளவும் அரசு தயாரில்லை"

நம்மட ஆக்கள் எல்லாம பெரிய சண்டியர்களாகிவிட்டினம் ஒசாமா ரேஞசுக்கு அடுத்த நாடுகளோட சவால் விடுகிற அளவுக்கு:)

"அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுக்களில் தமக்குள்ள நேர்மையை காண்பித்தால் அது தொடர்பாக அரசு பரசீலிக்கும். அமைதிப் பேச்சுக்கள் வெளிநாடுகளில் ஒன்றும் நடைபெறாது. உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டில்தான் பேசப்படும் என்று கூறியுள்ளார்."

அப்ப இவ்வளவு நாளும் என்னத்தைக்காட்டி பேசினவையள் என்ன நீங்கள் சொல்லுறியள் எனக்கு விளங்கையில்லை, என்னடா கேக்குறவன் கேணையன் எண்டால் எனக்கு வாயில வருகுது நல்லா...

வெளிநாடுகளில் நடக்க மாட்டுதெண்டுறது நல்ல விசயம்தான் தேவையில்லாத மூக்கு நுழைப்புகளையும் அரசியல் தலையீடுகளையும் குறைச்சுக்கொள்ளலாம் அனால் இரண்டு தரப்பும் பேச வாறதுக்கு முன்னம் சில முடிவுகளெடுத்துக்கொண்டு வாறது நல்லது எண்டுறது என்னுடைய எண்ணம் பேச்சுவார்த்தை மேசை கொத்து ரொட்டி தட்டாகக்கூடாது பாருங்கோ...அதோட ஆராருக்கு என்ன வேசம் அவையின்ர பாத்திரத்துக்கு என்ன கதை வசனம் ஆருக்கு பதிலா ஆர் பின்னணிக்குரல் குடுக்குறது எண்டெல்லாம சரியாக்கவனிக்க வேணும் முக்கிமான விசயம் எத்தனை எபிசோட் பேசுறது முடிவுரை என்ன எண்டுறதையும் முதலே தீர்மானிச்சுங்கொள்ளுங்கோ ஏனெண்டால் பேசப்போறது நீங்கள் அதைக்கேக்கப்போறதும் நீங்கள் தானே சனம் உப்பிடி எத்தினையைப்பாத்துட்டுது...

உவர் இப்பிடிச்சொல்லுறார் அவர் வெளிநாடுகளிட்டை என்னென்னவோ சொல்லுறார் உங்கடை கூத்துகளைப்பாத்தா உங்களுக்கே சிரிப்பு வரயில்லையே எதிர்காலத்தில உங்கடை பேரப்பிள்ளைகள் படிக்கேக்க இலங்கையின் அரசியல் என்றால் எல்லாம விரும்பிப்படிக்குங்கள் அவ்வளவு சிரிப்பு வருகிற பாடமாத்தான் அது இருக்கும்அதனாலதான் நான் இளைய சமுதாயத்திட்டை அடிக்கடி கேக்குறது இலங்கையின்ரை வரலாற்றை மாற்றி எழுதுவம் வாங்கோவெண்டு.

அது சரி இந்த தரப்பு ஆடாத கூத்தெல்லாம் ஆடிக்கொண்டிருக்கு ஆனா மற்றாக்கள் ஒண்டும் கதைக்கிற மாதிரி தெரியயில்லையே ஓ... ஒரு வேளை அவை கதைக்கமாட்டினம் ஆனா அங்கங்க வெடிவச்சு நாங்கள் இருக்கிறம் எண்டு காட்டிக்கொள்ளுவனை எண்டு நினைக்கிறன் என்ன கொடுமையடா இது எங்கடை சனத்துக்கு...

நீங்கள் எவ்வளவு புடுங்கினாலும் கொழும்புக்குள்ளை குண்டு வெடிக்கிறத தடுக்க முடியயில்லைதானே உங்களுக்கு எண்டுறமாதிரி இருக்கு நாட்டில நடக்கிற விசயங்கள் , அதேமாதிரி தின்ன இல்லாட்டிலும் வருத்தத்துக்கு மருந்தில்லாட்டிலும் நாங்கள் களத்தில பலமாத்தன் இருக்கிறம் எண்டு மற்றாக்களும் ஒரு பிடியாத்தான் இருக்கினம்...
எனக்கு சிரிப்புத்தான் வருகுது உவையளின்ர கூத்துகளைப்பாக்க ஒரு வேளை எனக்கு அறிவு போதாதோ உதுகளையெல்லாம் புரிஞ்சுகொள்ளுகிற அளவுக்கு; இருக்கலாம் அரசியலும் வரலாறும் எனக்கு தெரியாதுதான் ஆனா அடுத்த மனுசனை நல்லாத்தெரியும் பாருங்கோ ஏனெண்டா என்னட்டை இருக்கிற ஒரே சொத்து அன்பு எனக்கிருக்கிற ஒரே திறமை புரிந்துணர்வு...

இதுகளைப்பற்றி எழுதப்போனால் நான் எழுதுறது இப்ப முடியாது அதால இந்தப்பதிவை இதோட நிப்பாட்டுறன் ஏதாவது டவுட் இருந்தா ஆராவது அரசியல், வரலாறு தெரிஞ்சாக்களுட்டை கேளுங்கோ நான் வாறன் போட்டு ஒரு விசயத்தை மறந்து போட்டன் உண்மையா இது எனக்கு அந்த கட்டுரையை வாசிக்கேக்க மனதிலை வந்த விசயங்கள் மட்டும்தான் வேற எந்த உள்குத்தும் கிடையாது, ஒரு பதிவு போடவேணும் எண்டு இதையெல்லாம் எழுத வேண்டியிருக்கு...

உனக்கு தெரியுமோ மச்சான்...1

*
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டுவைக்காத இடமுமில்லை
நாங்கள் நாட்டுக்குள்ள
குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்
எங்களுக்கு இருக்க இடமில்லை...

*
நாங்கள் பாடாத
பண்பாடோ
நாங்கள் பேணாத
கலாச்சாரமோ
நாங்கள் காட்டாத
மனித நேயமோ
நாங்கள் கவனிக்காத
மனித உரிமைகளோ
நாங்கள் நாடாத
சமாதானமோ
நாங்கள் பேசாத
சுபிட்சமோ
நாங்கள் செய்யாத
யுத்த நிறுத்தமோ
எவ்வளவு பார்த்திருப்போம்
முப்பது வருடங்களாக
அன்பையும் சந்தோசத்தையும் தவிர...

ஒரு சின்ன கவிதையும் பெரிய பொருளும்...

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இந்தக் கவிதையை தந்து போயிருந்தது யாரோ ஒரு தென்னாபிரிக்கா சிறுமி ஒருத்தி எழுதியதாகவும் அது 2006 ம் ஆண்டின் சிறந்த கவிதை கவிதையாக UN அமைப்பின் தேர்வாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் சொல்லியிருந்தது...

வாசித்துப்பாருங்கள்;

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black And
when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green And
when you die, you gray And
you calling me colored??

எவ்வளவுதான் உலகம் ஒரு முகப்படுத்தப்பட்டாலும், இன்னமும் மனிதன் மறக்கவும் தவிர்க்கவும் வேண்டிய பல விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சின்ன குழந்தையின் கவிதை சொல்லிப்போகிற விடயம் மிகப்பெரியதாகவிருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறது...

இந்தப்பிரச்சனை சக மனிதனை தங்களில் ஒருவனாக பாவனை செய்வதற்கு பலருக்கு முடிவதில்லை... நிறம், மதம், மொழி, தொழில், அந்தஸ்து, என்ற பல காரணிகளால் ஒருவரை ஒருவர் ; மற்றவரிலிருந்து பிரித்துக்கொள்கிறோம் தேவையற்றதாகிய தன்முனைப்புகளில் அடுத்தவருக்கும் நமக்கும் சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

இலங்கையில் இருப்பதும் இதுதான் ஒரு நாள் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் மறந்து இலங்கையர்களாக வாழ்ந்து பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று அதன் பிறகு பாருங்கள் ஒரு நாள் முதல்வன் போல இந்த ஒரு நாளில் இலங்கை எவ்வளவு மாறிப்போகிறதென்று...



என்ன ஒரு நாளுக்கான அனுமதியை யார் தருவார் என்று யோசிக்கிறீர்களா... இதுதான் இந்த தயக்கம்தான் இலங்கை இப்படி இருப்பதற்கு காரணம் மனதில் ஆசையிருந்தாலும், விருப்பமும், சந்தோசமும் இருந்தாலும் மற்றயவர்களோடு பழகுவதில் காட்டுகிற தயக்கமும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத அந்த சூழல்தான் அடிப்படையே॥ மனதில் இருவருக்குமே ஆசையும் காதலும் இருந்தாலும் நாட்டின் நிலமையால் உள்ளுக்குள் அழுதுபிரிந்த காதல் பலதை நான் பார்த்திருக்கிறேன்...


தயாராகுங்கள்... உண்மையாக வாழ்வதற்கு மாற்றிக்காட்டுவோம் இலங்கையை புதியதாக.பழையன கழிவதும், புதியன புகுவதும்... உலக இயல்பு நாம் மட்டும் ஏன் இன்னமும் முப்பது வருடம் பழைய பகையை; சில சுயநல வாதிகளிற்காகவும், தவிர்க்க முடியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...


மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.

மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1

கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில இருந்து குறைஞ்சது ஒரு ஐந்து பதிவெண்டாலும் போடலாம் குடும்பம் காதல் வேலை சம்பளம் என்பதோடு கலாச்சாரம் வாழ்வியல் மனிதர்கள் சூழ்நிலை என பல விசயங்களை எழுதி என்ரை மண்டைய காய வைச்சுப்போட்டான் ( அதுல அவனுக்கென்ன சந்தோசமோ பாவம் அனுபவிச்சுட்டுப் போகட்டும்) இதெல்லாம் போதாதெண்டு Phone எடுத்து “பதிலைப் போடடா கடைசி” எண்டு தொடங்கி குடுத்தான் ஒரு பிரசங்கம் பாருங்கோ அது தனி பதிவிலை போடலாம் கெட்ட வார்த்தைகளை சந்தோசமாக பயன்படுத்துவது எப்படி என்று



ஆனாலும் அதுகளை வாசிச்ச பிறகுதான் தெரியுது மத்திய கிழக்குல என்ன நடக்குதெண்டு இனி கொஞ்சம் அவன் கடிதங்களில் இருந்து


மச்சான் எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இருந்துதானே ஆகவேண்டும் அதை விடு ஆனால் நீ அடிக்கடி கடிதம் போடு நான் இங்கே இருப்பதற்கு அவைதான் வேண்டும் நான் உங்களை எல்லாம் இழந்துவிட்டிருக்கிறேன் என்கிற உணர்வே எனக்கு வரக்கூடாது அதற்காகவேனும் முடிந்தவரை ஊரில் நடக்கும் விசயங்களை எனக்கு எழுது என…



இங்கே நான் இருக்கிற இடத்தில் இ 21 இலங்கை ஆட்கள்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் கிழக்கிலங்கை முஸ்லீம்கள் என்னுடைய அறையில் நீர்கொழும்பு மனோஜ் மட்டக்களப்பு றொட்ணி பொத்துவில் ஷெயனுதீன், ஷரிவுதீன் என மொத்தம் 5 பேர் இருக்கிறோம் ஆனால் நான் இருப்பது ஒரு Camp Accommodation, இதிலை பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் துருக்கி என்று கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கிறம். சாப்பாட்டுக்கு நான் கவலைப்பபடுபவன் கிடையாது அது எனக்கு இருந்தால் போதும் ஆனாலும் ஒரு கூட்டத்துக்கு சமைப்பது போல தான் சாப்பாடு இருக்கும், சவுதிக்கு வந்ததில் முதல் செத்தது நாக்கு மச்சான். விமானம் ஏறும் பொழுதே நான் செத்துப்போனேன் என்பது வேறுவிடயம் அவள் இல்லாத இடத்தில் எனக்கெப்படி உயிர் இருக்கும் சரி அது பற்றி பிறகு எழுதுகிறேன் ஆனால் அது சம்பந்தமாக இப்ப கதைக்கிறதே ஒரு சுமை போலவும் சுகம் போலவும் இருக்கு சரி சரி இப்ப இதை நிப்பாட்டி வைப்பம்.

எனக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஒரு வாழ்வியல் முறைக்குள் வந்து மாட்டிக்கொண்டேன் என்பது சுருக்கமாக சொல்லும் என்னுடைய நிலமை ஆனால் எனக்கு இங்கு பல விடயங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது நிறைய விசயங்கள் புரியாமலும் இருக்கிறது...

குளிக்கிறதுக்கு பொதுவான குளியலறைகள் தான் நீளமாக வரிசையாக கட்டியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் குளியலறை ஒரு பக்கத்தில் கழிவறை என்று இருக்கும் அனேகமாய் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வேலை என்கிற படியால குறிப்பிட்ட நேரங்களில் அதுக்குள்ள போகவே முடியாது நான் முடிந்தவரை முதல் அல்லது தனியான நேரத்தில் போய்க்கொள்ளுவேன். அதெல்லாம் பறவாயில்லை ஆனால் இங்கே இருக்கிற மனிதர்களை புரிந்து கொள்வதுதான் பெரிய கஷ்டம் மச்சான் ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு மாதிரி பார்க்கலாம் போகப்போக ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளலாம் .......ஆனால் இவர்கள் எப்படியான நம்பிக்கையில் சவுதிக்கு வந்தார்கள் என்று பலரைப்பார்த்து வியந்திருக்கிறேன் ஆனால் அவர்களையும் குறை சொல்ல முடியாது அரவரவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ இங்கேயும், வீட்டிலும், இவர்களுக்குள்ளும் இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கும் வலிய யாரும் போவதுமில்லை அதே நேரம் மனதளவில் நெருங்குவதுமில்லை விலகுவதுமில்லை அவசரத்துக்கு உதவி செய்யாமலும் இல்லை.

ஒரு விதமான... இயல்பும் இல்லாத, இருத்தலும் இல்லாத நாட்கள் மட்டுமே நகருவதாகிய வாழ்வியல்தான் இங்கே இருக்கிறது... மொத்தத்தில் எனக்கும் என் வாழ்க்கை முறைக்கும் சற்றும் பொருந்தாத இடத்தில் இப்பொழுது இருக்கிறேன். நான் கொண்டு வந்த அக்கினிச் சிறகுகளை இது வரை எத்தனை முறை வாசித்தேன் என்று என்கே தெரியவில்லை மிக முக்கியமாய் புத்தகங்கள் என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்கிறது... இன்னும் மூன்று வருடங்கள் எனக்கு வீணாகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.....

நான் என்ன மாதிரியானவன் என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இது எனக்கு கிடைத்திருக்கிற தண்டனையும் நரகமும். எனக்கான உலகத்திலிருந்து நான் மிகத்தெலைவிலான ஒரு தண்டனைத்தீவில் தனித்து விடப்பட்டதாகிய உணர்வுதான் எனக்கு இப்பொழுது இருக்கிறது. இரவுகள் மிக நீளமாய் தூக்கத்திற்கு எதிரான ஊசி மருந்துகளை நிமிடத்திற்கொருமுறை முறையற்று குத்திக்கொள்வதைப்போல நித்திரை என்பது என்னோடு பகைத்திருக்கிறது. ஆனாலும் நான் இங்கே இருந்துதானே ஆக வேண்டும் நம்முடைய நிலமை அப்படித்தானே இருக்கிறது....நல்ல வேளை இலங்கை எனக்கு எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழ்வதற்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறது... நானெல்லாம் நெளிநாடு வருவேன் அதுவும் சவுதிக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்ன செய்ய இலங்கையின் கேவலமான அரசியலும் தேவையில்லாததுமான யுத்தமும் ஊரில் ஒழுங்காக வேலை செய்ய முடியாத வகைக்கு ஆக்கி விட்டிருக்கிறது.

நாம் நினைத்தோமா இப்படி திடீரென்று எல்லோரும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுவோம் என இல்லையே... மச்சான் எனக்கு இப்ப இருக்கிற கோபம் எல்லாம் இலங்கையில் தேவையில்லாத ஒரு யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிற எல்லோரிலையும்தான் இது விடுதலைக்கான போராட்டம் போல இல்லை மச்சான் ஒரு வெறும் அரசியலாகத்தான் எனக்கு படுகிறது இப்ப இலங்கையில் இருக்கிற தலைமுறைக்கு இந்த அரசியலும் தெரியாது இன வேறுபாடும் தெரியாது ஏன் நானே நாட்டில வேலை செய்தது சிங்களப் பெடியளோடதானே. அரசியல்வாதிகள் தான் பழைய கதைகளையும் இல்லாததையும் சொல்லிச்சொல்லி நாடடை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகள் வேடிக்கை பார்ப்பதோடு தங்களுக்கான வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றன... இதை எழுதினால் கடிதம் இப்ப முடியாது.... அடுத்த கடிதத்தில் மிகுதி அனுபவங்களை எழுதுகிறேன் தற்காலிகமாக இப்ப முடிக்கிறேன் மொத்த ஊரையும் சுகம் கேட்டதாக சொல்...

சந்தோசம் வாழவின் பலம்...

அன்புடன்
உங்கள்...

வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

வ-வா-ச போட்டி என்று ஒன்று நடப்பதாக சொல்லியிருந்தார்கள் பல இடங்களில் அதற்கான ஆக்கங்களையும் பார்க்க முடிந்தது...சரி நானும் ஏதாவது எழுதலாம் என்று யோசிக்கையில் என்னுடைய பாழாப்போன பாதிக்கப்பட்ட மனதுக்கு இலங்கையில் பிறந்தவன் என்கிற ஒரேகாரணத்தால் இந்த சங்கத்தின் இயல்புக்கு மாறாகத்தான் எழுதவும் முடிகிறது வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை॥ நிலமை அப்படி நான் இழந்தவைகள் ஒருவேளை என்னை தொடர்ந்துகொண்டே இருப்பதாலோ தெரியவில்லை நான் எழுதுவதெல்லாம் இப்படியாகவே இருக்கிறது... ஆனால் இயல்பில் நான் சந்தோசம் நிறைந்தவன் சந்தோசம் வாழ்வின் பலம் என்பது நான் நாளாந்தம் பயன்படுத்துகிற வாக்கியங்களில் ஒன்று ...

சரி இனி விசயத்துக்கு வருவோம்...

1970 களில் இருந்து தமிழர்களில் இருந்த தலைமுறையில் இளைய தலை முறையினரில் பெரும்பாலானாவர்களின் வாழ்க்கை கெட்டழிந்து போய்விட்டது என்றால் யாரும் மறுக்க முடியாது...அந்த நாட்களில் 18 20 வயதிலிருந்து நடுத்தர வயது வரை இருந்த எல்லோருமே தங்கள் வாழ்வின் பாதை மாறிப்போன அல்லது॥ பாதிக்கப்பட்ட அல்லது தடைப்பட்ட அனுபவங்களை கட்டாயம் வைத்திருப்பார்கள்... அவற்றை சொல்வதற்கு அவர்களில் பெரும்பாலானாவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் உயிரோடு இல்லை என்பது இவர்கள் ஒன்றும் இயலல்பாக இறக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது...

சரி அந்த நாட்களில் இருந்த சூழ்நிலையும் வழி நடத்தல்களும் அப்படித்தான் இருந்தத்...அதனால் பாதிக்கப்பட்டது ஆனால் அது இன்னமும் தொடர்வதில் என்ன லாபம் ஆரம்பத்தில் தமிழர்கள்தான் என்றிருந்து நிலமை மாறி ஒட்டு மொத்த இலங்கையுமே அரசியல் நரிகளால் சுபிட்சத்தை தொலைத்திருக்கிறது...

பழைய கதைகளைப்பேசிப்பேசியே அரசியலில் சுய லாபம் தேடிக்கொள்பவர்களும் இதற்கு ஏதாவது செய்ய முயன்று அநியாயமாக இறந்து போனவர்களும் தங்கள் இயல்பான நிலையுடனும் உணர்வுகளுடனும் வாழ முடியாமல் போன இலங்கையின் சபிக்கப்பட்ட மக்களுமாக இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது இந்து துயரம்।தங்கள் இதயங்களில் எலலோரோடும் கலந்து வாழவும் சந்தோசித்திருக்கவும் ஆசையிருக்கிற இளம் சமுதாயமும் கேவலமான அரசியலாலும் யுத்தத்தினாலும் ஒருவரோடொருவர் பரஸ்பரம் மனம்விட்டு பழக முடயாத சூழலில் இருக்கிற சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

அப்பபொழுதிருந்த நிலமையில் அப்படியாகிவிட்டது இப்பொழுதும் ஏன் அதையே பேசி எங்களையும் வீணடிக்கிறீர்கள் என்கிற மனநிலைமைதான் இன்றய இளம் சந்ததியினருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம் இளம் சந்ததி மட்டுமல்ல எல்லோருமே ஏறக்குறைய இந்த மனோநிலையில்தான் இருக்கிறார்கள்... நாடு எப்பொழுது நல்ல நிலைக்கு வருவது நாம் எப்பொழுது நன்றாக வாழ்வது என்கிற களைப்பும் சலிப்புமானதொரு இயல்பற்ற வாழ்க்கைதான இருக்கிறது இலங்கை மக்களுக்கு...

சரி இது இப்படி என்றால் 2000ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு என்ன தெரியும் 1970களிலும் 1980களிலும் நடந்ததைப்பற்றி அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் முறையான வாழ்க்கை இல்லாமல் போகும்படிக்கு ஒரு வேளை இலங்கையில் பிறந்ததுதான் அவர்கள் செய்த பாவமோ என்னவோ... இரண்டு தலை முநைகள் வீணாகி விட்டது இனியும் வேண்டாம் இந்த சோகம் நாங்கள் வாழ்வதற்கு தயாராயிருக்கிறோம் எங்களை வாழவிடுங்கள்... தயவு செய்து...அழகான தீவில் அமைதியான சூழலில் அற்புதமான வாழ்க்கை எங்களுக்கு காத்திருக்கிறது அதனை வாழவிடுங்கள்; முடிந்தவரை முன்னேறிய இலங்கையை வருகிற சந்ததிக்கு தருகிறோம்....


வருத்தப்படாத வாலிபர்களின் சங்கத்தின் போட்டிக்கு இதனை எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஆனால் இந்த விடயம் நிச்சயமாக வருத்தப்படாதவர்கள் முலமாகத்தான் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பது என் கருத்து ச்தோசமாயிருக்கிறவர்களால் மட்டுமே அடுத்தவர்களையும் சந்தோசமாய் வைத்திருக்க முடியும்। என்ன நான் சொல்வது...
மற்றப்படி எந்த உள்நோக்கமும் கிடையாது...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

ஓரு ஆசிரியர் கட்டுரையும் என் புலம்பலும்...

முதலில் ஆசிரியர் கட்டுரை...
Posted on: 2008-04-01

பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை

உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படும் அவலங்களையும் கேக், பாண் போன்றவற்றின் பெறுமதிகளையும் அறியாதவனாக.அதுபோல, இலங்கை அரசின் மோசமான அரசாட்சி முறைமையினாலும், திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல், மோசடிகளினாலும் நாட்டின் பொருண்மிய நிலைமை நலிவுற்று, அப்பாவி மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் நேர்ந்திருக்கிறது. இச்சமயத்தில் "கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதை விடுத்து அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள்!' என்று விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்துக் கோரிக்கை விடுக்கிறார் இலங்கையின் அமைச்சர் ஒருவர்.அதுவும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இப்படிக் கணக்கு வழக்குப் புள்ளி விவரங்களுடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்று லூயி மன்னன் கூறியமை போன்று ""பாண், றொட்டி போன்றவை விலை கூடவென்றால் அரிசியில் தயாரான சோற்றைச் சாப்பிடுவது மலிவானது!'' என்று குறிப்பிட்டுக் கணக்கு வேறு காட்டி யிருக்கின்றார் விட்டிருக்கின்றார் அவர்.உலக சந்தையில் கோதுமை மாவின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதால் தாம் முன்னர் ஒரு தடவை ஆரூடம் கூறியமை போன்று ஓர் இறாத்தல் பாணின் விலை விரைவில் நூறு ரூபாவானாலும் ஆச்சரியப்படுவதற்கே இடமில்லை என்றும் அப்படியாவதை ஒருவராலுமே தடுத்துவிட முடியாது என்றும் வெகு "சிம்பிள்' ஆகக் கூறியிருக்கின்றார் அவர்.அவரது பேச்சையும், கணக்குக் காட்டும் திறனையும் நோக்கும்போது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டியபடி, பட்டினி அவலத்தைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுத் திணறிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பாமரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.அரிசியின் விலையும் உயரப் பறந்துகொண்டிருக்கின்றது. தேங்காயின் விலையும் தென்னை மர உச்சியையும் தாண்டி உயர்ந்துவிட்டது. சோறு சமைப்பதற்கான எரிபொருள், எரிவாயு அல்லது விறகின் விலைகளும் எகிறிவிட்டன.இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாண் வாங்கிச் சாப்பிடுவதை விட, அரிசியைச் சோறாக்கி, தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடுவது மலிவானது என்று கூறி மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி, வசவை வாங்கிக்கட்டிக் கொள்கிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.இலங்கை மேலும் மேலும் வறுமைக்குள் நீண்ட கால அடிப்படையிலும், குறுகிய காலச் செயற்பாட்டிலும் பின்னடைவுக்குள் மூழ்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை ஆசிய, பசுபிக் சமூக ஆய்வறிக்கை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.வறுமையை ஒழிப்பதிலும், பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதிலும், மோசமான யுத்தங்கள் மற்றும் அழிவுகள், மோதல்களில் இருந்து மக்களை மீட்பதிலும் கொழும்பில் மாறி மாறி வரும் அரசுகளுக்குத் திறமையோ, திராணியோ, தகுதியோ இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுப் போக்குகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.பாணின் விலை விரைவில் நூறு ரூபாவாவதை யாராலுமே தடுக்க முடியாது என்று கைவிரிப்பதைப்போல நுகர்வோர் விவகார அமைச்சரே உறுதிப்படுத்துகின்றமை கொழும்பு அரசின் திறமையின்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றமையே இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்குக் காரணம் என இலங்கை அரசு கூறும் சமாளிப்புகள் அப்பட்டமான பொய் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.நல்லாட்சிக்கான அரசு ஒன்று கொழும்பில் ஏற்படாதவரை இனப்பிணக்கையும், பூசலையும், பேரினவாத வெறியையும், யுத்தத் தீவிரத்தையும் வளர்த்து, அதில் அரசியல் ஆதிக்கக் குளிர்காயும் தற்போதைய தலைமைகள் மாறும்வரை இத்தகைய பொருளாதாரப் பாதிப்புப் படுகுழியில் இருந்தும் நாடு விடுபடுவது துர்லபமே.

இலங்கையின் பத்திரிகை ஓன்றின் ஆசிரியர் கட்டுரையாக வெளி வந்திருந்தது மேலே இருக்கிற விடயம் ...

அப்பாடா ஒரு வழியா இதையும் எழுதிவிட்டியள் என..., குறை நினையாதையுங்கோ நான் கிரமமாக உங்கடை செய்திகளை படிக்கிறயில்லை அதாலைதான் இப்படிச்சொல்கிறேன்.

இனி என் புலம்பல் இலங்கையின் சகோதரங்களுக்கு...

பொருளாதார பின்னடைவுக்கு என்ன காரணம் எண்டு நல்லா தெரியும்தானே பிறகென்ன கறுமத்துக்கு திரும்பவும் அதுக்குள்ளையே கிடந்து அழுகிறியள் வெளிலை வந்து உலகத்தை பாருங்கோவனப்பா... உலகம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கு எண்டு, சும்மா செக்கு மாடு மாதிரி அதுக்குள்ளையே இருந்து அது சரியில்லை இது சரியில்லை எண்டுறதை விட நீங்கள் சிலதை செய்து பாக்கலாம் தானே?

இவ்வளவு காலம் அனுபவிச்ச உங்களுக்கே இன்னமும் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியல்லை எண்டால் அந்த அமைச்சருக்கு என்ன விளங்கும் பதவியும், சொல்லுறதுக்கான் தைரியமும் இருக்கேக்க அவர் எதையாவது சொல்லத்தான் செய்வார். ஊரில அதானே நடக்குது நீங்கள், எல்லாம் எப்ப உங்கடை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறியள் படிச்சா மட்டும் போதுமே ... அவர் இது சொல்லுறார், இவர் இது சொல்லுறார் எண்டு கதைக்கத்தான் சரி அல்லது ஆராவது ஒருத்தருக்கு பின்னால இருக்கத்தான் சரி அதுவும் இல்லையெண்டால் எங்கயாவது ஓடத்தப்பி ஒரு போர்வையோட ஒளிஞ்சு கொண்டு வால்பிடிக்கத்தானே தெரியும்...உண்மையா என்ன நடக்குது எண்டு தெரிஞ்சு கொள்கிற பழக்கமுமில்லை தெரிஞ்சாலும் அதை சொல்லுற தைரியமும் இல்லை,பிறகெதுக்கு எங்கடை ஆக்கள் அப்பிடி இருந்தினை இப்பிடி இருந்தினை எண்டு சவடால் கதைக்கிறியள் ...

நாட்டில இருக்கிற குழப்பம் தேவையில்லாதது எண்டு தெரியுதல்ல்லோ இப்பிரச்சனைகள் எல்லாத்துக்கும் காரணம் சுய லாபம் கொண்ட அரசியலும், தகுதியற்ற தலைமைகளும் தான் எண்டு தெரியுதல்லோ பிறகேன் உப்பிடியே இருக்கிறியள். வாழ்க்கையில வெளிநாட்டுக்கு போறயில்லை எண்டிருந்த பல தெற்கிலங்கை சுகோதரங்களும் 400 றியால் சாசுக்கு சவுதிக்கு போகுதுகள் நாட்டில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது ஆனா பேரினவாதம், யுத்தம், ஊழல், கேவலங்கெட்ட அரசியல், நரிக்குலத் தலைமைகள் என்று கண்ட கழிவுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியுது என உங்களுக்கு... எனக்கு வர்ற வேகத்துக்கு இனி இப்பிடி எழுதமாட்டன் ஓ... சொல்லிப்போட்டன் அப்பவும் நினைக்கிறனான் என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இதிலை எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு ஏனெண்டால் நான் இன்னொரு வலைப்பதிவு வச்சிருக்கிறன் பாருங்கோ... சரி அதை விடுவம் இப்ப இதை முடிப்பம்...

ஒரு காலத்திலயும் உது நடக்காது, முடிஞ்சால் உங்களை நீங்கள் மாத்திக்கொள்ளுங்கோ நாடு தன்னால மாறும் ஒவ்வொரு தனி மனிசனும் சேர்ந்துதான் ஒரு குடும்பம், ஓவ்வொரு குடும்பமும் சேர்ந்துதான் ஒரு ஊர், ஒர்வொரு ஊரும் சேர்ந்துதான் ஒரு நாடு; இது அடிப்படை தெரியுந்தானே... வீட்டுக்கொருத்தர் மாறுங்கோ நாடு தன்னால மாறும் சும்மா வெளிநாட்டுக்கு போறதும் அவை அங்க படங்காட்டுறதும் வர்ற காசிலை பாதி வயித்தை கழுவிக்கொண்டு சாத்தின கதவுக்குள்ளை இருந்து கதைக்குறதுக்கும் பெயர் வாழ்க்கை இல்லை.

நான் இதை சொல்லுறது இந்த பதிவை வாசிக்கத் தெரிஞ்ச சகோதரங்களுக்கு மட்டும் கிடையாது, விசயத்தை விளங்கி கொள்ளத்தெரிஞ்ச எல்லா சகோதரத்துக்குந்தான். இலங்கையை பொறுத்த மட்டில ராணுவம் எண்டுறது நாட்டுக்கு வெளியில மடடும் தேவையான ஒண்டெண்டுதான் நான் சொல்லுவன், நாட்டுக்குள்ள எவர் ஆயுதம் வச்சிருந்தாலும் அது அவர் அவற்றை பயத்திலையும், தவறுகளை மறைக்கவும், சுய லாபத்துக்காகவும் தான் என்பது என் கருத்து. வன்முறை எண்டுற கொடுமையால எதையும் சாதிக்க முடியாது. அற்புதமான தீவு, வாழுறதுக்குரிய எல்லாம் இருக்கு ஆனா வாழத்தான் தெரியயில்லை எங்கடை கறுமங்களுக்கு!

பாணைப்பற்றி கதைக்கேக்கை ஆது சம்பந்தமா நான் மனசில நினைக்கிற விசயங்கள் கனக்க அது இன்னொரு பதிவில சொல்லுறன் சும்மா கதைக்கிறதை விட நீங்கள் மாறுங்கோ "எல்லோரும் மாற்றங்களை விரும்புகிறார்கள் தாங்கள் மாறுவதை அல்ல" எண்டு ஆரோ சொன்னது இந்த நேரத்தில ஞாபகம் வருகுது...

கொழும்பில காலமை குண்டு வெடிச்சா பின்னேரம் மறந்து போகுதுகள் சனம் ஏனெண்டா அங்க இருக்கிறதுகளுக்கு உதுக்கெல்லாம் நேரம் கிடையாது அவரவற்றை வேலையும் வாழ்வும் முக்கியம் வன்னிக்கை நடக்கிறதைப்பற்றி வாசிக்க முடிந்தாலும் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை பேராதனையில் படிக்கிற பெடியளுக்கு வீட்டில என்ன, படிச்சமா, fun எடுத்தமா, நாலு பேரோட பழகினமா, வேலை தேடி வெளிநாட்டுக்கு போனமா எண்டு இருக்குதுகள் இளசுகள்.

தெளிவான நாகரிகமும் திறைமையும் மிகுந்தவர்கள் இலங்கையர்கள என்பது மற்றய நாட்டுக்காரர்களின் அபிப்பிராயம் ஆனால் நாட்டுக்குள்ள நடக்கிறதை பார்த்தால் அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் போலயெல்லோ கிடக்கு... சும்மா வீண் விதண்டாவாதங்களில காலத்தை விடாம பரஸ்பரம் ஒவ்வொரு தனி மனிதனும் மாறுதலும் புரிந்து கொள்ளுதலும் அவசியம் எண்டுதான் எனக்குப் படுகிறது...

ஏன் கடந்த காலங்களை சொல்லிச் சொல்லி நிகழ் காலத்தை இழக்க வேண்டும் 2003 இல பிறந்ததுக்கு என்ன தெரியும் 70 இல இருந்து பிறந்ததுகளில பாதி கெட்டு சீரழிஞ்சு போட்டுதுகள், போதாதெண்டு எதுக்கிந்த கொலை வெறி; வேண்டாம் புன்னகையும் வாழ்த்துக்களும் எந்த விதமான செலவும் இல்லாமல் மற்றவாகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரும் செல்வங்கள் அவற்றை மனதார வழங்குவோம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு...

ஏன் பெங்களூர்...

இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் பெங்களூரின் கொண்டாட்டங்கள், ஏன் பெங்களூர் இளைஞர்களின் நகரமாக இருக்கிறது என்ற கேள்வியோடு வந்திருந்தது அதைப்பார்த்தாலே தெரியுது படித்த இபணமிருக்கிற இளைய தலைமுறையினரின் வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறதென்பது...இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை; உங்கள் பார்வைக்கு ஒரு சில படங்கள் மட்டும்...
மற்றபடி நானும் கொண்டாட்டங்களை விரும்புபவன்...














என்ன எழுதுவது...

என்ன எழுதுவது என்று யோசிக்கையில் மனதிற்குள் அடுக்கடுக்காக பல விடயங்கள் வருவதும் அவை ஒவ்வொன்றாய் பெருகுவதும் பின் விலகுவதும் சேர்வதுமாக நிறைய எழுதலாம் போல இருக்கும் ஆனால் எழுத வேண்டும் என்று வந்து அமர்கையில் எதுவுமே வருவதில்லை எழுதுகிற ஆற்றல் அவ்வளவுதானோ அல்லது அவை எழுத்தில் அடங்காதவையோ என் சிற்றறிவுக்கு நான் நினைப்பவற்றை தொகுக்கக்கூட முடிவதில்லை தொடர்பற்றதாகிய காடசிகளுடனானதொரு பெருங்கனவைப்போல என் மனதில் அவை கோர்வையாக இல்லாமையும் ஒரு காரணமாகலாம் என்பதோடு எழுதுவாதற்கான சூழல் எனக்கு வாய்க்காமல்தானிருக்கிறது।

நான் இருக்கும் இடத்தில் கடிதம் வராதவர்கள் கூட இருக்கிறார்கள் ஆனால் அவார்கள் பிழைக்கத்தெரிந்த புத்திசாலிகள், ஏமாற்றத்தெரிந்த நல்லவர்கள், உணர்வுகளை வேடிக்கை பார்ப்வர்கள் என அவர்களிடம் இருக்கிற பணம் என்கிற வியாதிக்கு வைத்திய வல்லுனர்கள் அதனை தவிர்ப்போம்.

ஒரு குமுதம் கிடைப்பதே அரிது அதிலும் படங்கள் பார்ப்பவர்களே என்னைச்சூழ இருக்கிறார்கள அவர்களுக்கு மத்தியில் நான்கு பலகைச்சுவர்களுக்கு நடுவில் நான் வாசிப்பதே பெருவிடயம் ஆனாலும் நான் இவ்வளவு நாட்கள் இங்கிருப்பதே வாசிப்பதாலும் சுவாசிப்பதாலும் என்றாலும் அது மிகையானதல்ல என்பது என் எண்ணம்.என்னுடைய படுக்கையில் எப்பொழுதும் ஏதாவது கட்டுரைகள் கவிதைகள் என்று வாசிப்பதற்கும் நான் கிறுக்கியவை குறித்தவை எழுதுவதற்குரிய தாள்கள என்று அவை இல்லாவிட்டால் எனக்கு தூக்கமே வருவதில்லை...

இந்நிலையில் இலங்கையின் பலர் இப்பொழுது வலைப்பதிவில் எழுதுவது மகிழ்ச்சி தரும் விடயம் அத்தோடு இலங்கையின் பத்திரிகைகள் வலைப்பதிவுகளை கவனிக்க ஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்க விடயம்... ஆனாலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியானதொரு இறுக்கமான சூழலில் எழுதிக்கொண்டிருப்பது வலைப்பதிவில் எழுதுவதே நாம் நாமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்பது என் கருத்து (கவனிக்கவும்) என் முகத்தை காட்டுவதைவிட மனதையும் சிந்தனை வெளிப்பாடுகளையும் காட்டுவது நன்றென்று நம்புகிறேன், நான் யார் என்பது முக்கியமல்ல அல்லது கூறுவது யார் என் பது முக்கியமல்ல என்ன கூறுகிறார் என்பதுதான் கவனத்திற்குரியது அப்படித்தானே (அதற்காக நான் ஓன்றும் சமுக எழுத்தளன் அல்ல ஏதொ ஒரு சந்தோசத்திற்காக என்னுடைய கருத்துக்களையும் பதிய வந்தவன் மட்டுமே நான் கதைப்பதை கேட்பதற்க யாரும் இல்லாத காரணத்தில் எழுத வந்தவன்)

இந்த நிலையில் கடல்கடந்து வாழும் இலங்கைத்தமிழர் மனதில் என்ன இருக்கிறது அவர்களது நோக்கம் அல்லது தமது இருப்பு மற்றும் அதற்கான ஆதாரம் என அவர்கள் கருதுவது என்ன? வலை பதியும் நண்பர்களுக்கு நீங்கள ஏதோ கணினிக்கு முன்னால் இருந்து எழுதக்கூடிய சூழல் கிடைக்குமளவிற்கு இருக்கிறீர்கள் ஆனால் எத்தனையோ சகோதரங்கள் தங்களது அடுத்த நாள் பற்றிய தேடல்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறார்கள...இலங்கையின் இன்றய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணிசமான மன உழைச்சல்களோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை வீட்டை விட்டு வெளியே வருகையில் உங்களை கடந்து போகிறவாகளிடம் அவர் என்ன மொழிபேசுபவராக இருந்தாலும் பரவாயில்லை எப்படி இருக்கிறீர்கள் என்கிற கேள்வியை மனதார கேட்டுப்பாருங்கள் அவர்களுடைய பதிலையும் கவனித்துக்கொள்ளுங்கள...யாராவது ஒருவர் முழுமனதோடு வாழ்ககை நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாராவென...ஏன் ஏனிந்த வாழாத வாழ்க்கை...

நாம் பொதுவாக வாழ்வதே கிடையாது ஓடி ஒடிக்களைத்து ஒரு புள்ளியில் நின்று திரும்பி பார்க்கையில் நல்ல நினைவுகள் என்று மீதமிருப்பவை ஒரு சிலதான் ஆனால் இன்னமும் நிறைவேறாமல் நிறைய இருக்கும்। நிறைவேற்றக்கூடிய தேவைகளாயிருந்தாலும் நிர்ப்பந்தங்களால் அவை கிடப்பில் இருக்கலாம் அல்லது நீங்கிப்போயிருக்கலாம் அல்லது அது முடிந்து விட்டது இனி எதற்கு என்பதாக ஆகியிருக்கலாம். ம்ம்ம்... அட அதற்கிடையில் இத்தனை வருடங்கள் ஒடிவிட்டதே என்று நீளமானதொரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளிப்படுகிறதுஅதன்பிறகு கொஞ்சம் நமக்காக வாழலாம் என்று ஆரம்பிக்கையிலேயே முடிந்து விடுகிறது வாழ்ககை.....

எல்லோரும் வாழ்வுக்கான தேடலிலேயே நம் காலத்தை கடந்து விடுகிறோம் சரி தேடல்தானே வாழ்க்கை சரிதான் நாம் எதற்காக எதை தேடுகிறோம் எங்கே போய்ககொண்டிருக்கிறோம் எங்கே தேடுகிறோம் என்பது தெரியாமலே ஓடிக்களைத்து ஓய்ந்து விடுகிறோம் வீண் விதண்டாவாதங்களில் தொலைந்து விடுகிறோம் வாழவேண்டிய தருணங்களை இழந்து விடுகிறோம் (இங்கே நானொன்றும் ஆன்மீகமோ தத்துவமோ பேசவில்லை அந்த அளவுக்கு நான் தெரிந்தவுனுமல்ல)

எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வெறும் விதண்டாவாதமும் பிடிவாதங்களும் மட்டுமே வெறும் அரசியல் இப்பொழுது இதை வாசிக்கையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இதற்கு முன்பாக என்ன செய்தீர்கள் இதற்கு பின்பாக என்ன செய்யப்போகிறீர்கள் இன்றய நாள் எப்படிக்கழிந்தது எல்லாவற்றையும் மனச்சாட்சியோடு யோசியுங்கள் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ யத்தனத்துடன் முயன்றிருப்பது தெரியும் பிறகென்ன அதைத்தானே நானும் சொல்கிறேன் அதையே முழுமையாக வாழ்வோம்...

எங்கேயோ தொடங்கி எங்கேயோ கொணர்ந்து நிறுத்தியிருக்கிறேன் இதை இந்த இடத்தில் முடிக்காமல் நிறுத்துகிறேன் இன்னொரு பதிவில் தொடரலாம்(இதையே தாங்க முடியவில்லை இன்னொரு பதிவா முடியல...)

ஏமாற்றம்...

அது பொறளையில் இருக்கும் ஒரு ஏஜென்சி சவுதிக்கு ஆட்களை அனுப்புவதில் பெயர்பெற்றது(எந்தமாதிரி) ஆனாலும் இப்பொழுது நாட்டில் இருக்கிற சூழ்நிலையையும் வருபவர்களின் அறியாமையையும் அவர்களது நிலமையையும் பயன்படுத்தி முடிந்தவரை அவர்களிடம் பணம்பார்த்துவிடுகிறது பணம்பார்ப்பது குற்றம் அல்லது அது குற்றம் அல்ல என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு ஒளவு தொகை எதற்காக அதுவும் கிடைக்கப்போகிற சம்பளத்திற்கும் விசா செலவுக்கும் எம்பந்தமும் கிடையாது, அத்தனைக்கும் அந்த சவுதி கம்பனி நம்ம ஏஜென்சிக்கு விசாவை மிகச்சிறிய தொகைக்கே கொடுக்கிறது என்பது நம்பகமான இடத்தில் இருந்து வந்த தகவல். போதாக்குறைக்கு நம்ம ஊர்ல காடடுற சம்பளம் சிலருக்கு சவுதி வந்ததும் குறைக்கப்படுகிறது எத்காக இப்படி நீங்கள்தான் காசு பார்க்கிறீர்கள் அல்லவா பிறகேன் அவர்களது சம்பளத்திலும் கை வைக்கிறீர்கள். சரி ஏஜென்சிக்கு இவ்வளவு என்றால் இடையில் பயிற்சி சான்றிதழ் என்று ஒரு பத்து நாளுக்குள் 10000, 20000 ,15000 என கிடைக்கிற தொகையை சுருட்டிக்கொள்கிறார்கள் அதிலும் பங்கு வேறு ஏன் ஏனிந்த வெறி காசிருக்கிறவன் உங்களிட்டை வரமாட்டான் நினைவில் வைக்கவும். இப்படி பெரிய தொகையை அநியாயமாக கொடுத்து வருவதாலும் குடும்ப சூழலாலும் சவுதியில என்ன கஷ்டம் இருந்தாலும் மனதிற்குள்ளேயே புழுங்கி மனதளவில் பலவீனமாகிவிடுகிறார்கள் பலர். இதில் ஏஜென்சியை மட்டும் குறை சொல்ல முடியாது ஏற்கனவே அனுபவம் உள்ள சிலரும் தேவைக்கதிகமான காசை முதலிலேயே கொடுத்து விட்டு பிறகு காசை திரும்ப பெறமுடியாமலும் ஊர்ல இருந்து என்ன செய்வது என்கிற நிலமையிலும் வீட்டு சூழ்நிலைகளினாலும் சவுதிக்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள் வந்தால் வாழ்க்கையும் கிடையாது திரும்ப போகையில் மிச்சமும் கிடையாது இதுக்கெல்லாம் நல்ல வழி என்ன நாட்டில இருக்கக் கூடிய தொழில் செய்யக்கூடிய ஒரு நிலமை இருந்தால் இலங்கையில் பிழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது அதற்கு முதல் தேவை தனி மனிதர்களுக்கிடையிலான புரிந்துணர்வு மடடுமே அது இருந்தால் ஜனாதிபதியும் வேண்டாம் தலைவரும் வேண்டாம் அரசும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் நாம் வாழலாம் ...

டுபாய்...



























கடந்த சில வருடங்களில் டுபாய் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு படுவேகமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது அது அடைந்திருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இலங்கைக் குடிமகனான எனக்கு பொறாமை கலந்த பெருமையையும் அதே நேரம் இலங்கை சார்ந்த எந்தன் விரக்தியையும் அதிகரித்திருக்கிறது...
மேலே வெறும் பாலைவனம் போல இருக்கிற முதல் படம் 1990 களில் அது எப்படி இருந்தது எனவும் இரண்டாவது மூன்றாவது படங்கள் அது கடந்த வருடம் எப்படி இருந்தது எனவும் காட்டுகிற படங்கள் அது மட்டுமல்ல உலகின் மிக உயரமான கட்டிடம், உலகின் மிக பெரிய வர்த்தக வளாகம், நீருக்கடியில் சுற்றுலா விடுதி, உலகின் மிக பெரிய செயற்கைத் தீவு என இன்னும் இன்னும் அது கட்டிக்கொண்டிருக்கிற கட்டடங்கள் நிறைய.